ராகுலுக்கு சொத்து எவ்வளவு?

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த ராகுல், தன் சொத்து விபரங்களையும் தாக்கல் செய்தார். அதில், தனக்கு, 14.85 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த, 2017 - 18ம் ஆண்டில், தனக்கு, 1.12 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தன் தாயிடம், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ள ராகுல், தனக்கு, மொத்தமாக, 72 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில், தனக்கு, 10 கோடி ரூபாய்க்கு சொத்து இருந்ததாக, ராகுல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)