வேட்பாளர், 'ஆப்சென்ட்' காம்ரேடுகள், 'அப்செட்'

பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து, கடந்த, 31ம் தேதி மாலை 6:00 மணியளவில், இந்திய கம்யூ., கட்சி சார்பில், பெரம்பலுார் தேரடி திடலில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.


இக்கூட்டத்தில் பங்கேற்ற, அக்கட்சியின் மாநில செயலர் முத்தரசன், தி.மு.க., வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஓட்டு சேகரித்து பேசினார்.கூட்டம் ஆரம்பித்தது முதல், மாநில செயலர் பேசும் வரை, வேட்பாளரை கம்யூ., கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், கூட்டம் முடிந்த பிறகும் வேட்பாளர் வரவில்லை. 'துறையூர் பகுதியில், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்' என, ஐ.ஜே.கே., கட்சியினர் கம்யூ., கட்சியினரிடம் தெரிவித்தனர்.


கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில செயலர், வேட்பாளருக்காக ஓட்டு கேட்க வந்திருக்கிறார். இது குறித்து, ஏற்கனவே வேட்பாளருக்கு தகவல் தெரிவித்தும், கூட்டணி தர்மத்தை மதிக்காமல், வேட்பாளர் பாரிவேந்தர் இவ்வாறு நடந்து கொண்டு விட்டாரே. இப்பவே ஜெயிச்சிட்ட மாதிரி கெத்தா இருக்காரே, வெற்றி பெற்று எம்.பி., ஆயிட்டாருன்னா, யாரையும் மதிக்கமாட்டாரு போல என, கம்யூனிஸ்ட் கட்சியினர், 'அப்செட்'டாகி புலம்பி வருகின்றனர்.


Bhaskaran - Chennai,இந்தியா
05-ஏப்-2019 07:17 Report Abuse
Bhaskaran அவர் வெற்றிபெற்றால் தன் பணபலத்தில் வெற்றிபெற்றதாகத்தான் கண்டிப்பாக சொல்லுவார்
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)