தவறான தகவல்: மோடிக்கு மம்தா பதில்

கோல்கட்டா: கோல்கட்டாவில் நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்கு திரிணமுல் காங். தலைவர் மம்தா பானர்ஜி முட்டுக்கட்டையாக உள்ளார். அவரை ஆட்சியில் இருந்து அகற்றினால் மட்டுமே மற்ற மாநிலங்களை போல மேற்கு வங்கமும் வளர்ச்சி அடையும் எனக்கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் நலன் பெற மோடி என்ன செய்தார்? எனது ஆட்சியின் கீழ் மேற்கு வங்கத்தில் விவசாயிகளின் வருமானம் மும்மடங்காக உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடி காலாவதியான நபர். அவர் முதலில் டில்லியைப் பற்றி கவலைப்படட்டும். அதன்பின்னர் மேற்கு வங்கத்தை பார்க்கட்டும். எனது அரசைப் பற்றி தவறான தகவல்களை மோடி அளித்துக் கொண்டிருக்கிறார். நான் பொய் கூற மாட்டேன். பொய் சொல்வதற்கு நான் ஒன்றும் மோடி இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)