'நண்பர்களும் எதிரிகளும்'

'நண்பர்களும் எதிரிகளும்'


கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''ஏற்கனவே, இது குறித்து விளக்கம் அளித்து விட்டோம். தினமும் அதை பத்தி சொல்ல வேண்டுமா?


கேரளாவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் தான் போட்டி. யாரோ ஒருவர் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தை பொருத்த வரை, பா.ஜ.க., - அ.தி.மு.க.,வை எதிர்ப்பது எங்கள் கொள்கை. கேரளாவில், பரஸ்பர நண்பர்களுக்கான போட்டி; இங்கு, எதிரிகளுக்கும், நண்பர்களுக்குமான போட்டி,'' என, ஒருவாறாக சமாளித்தார்.


'முரண்பட்ட கூட்டணி'


பா.ஜ., மாநில பொது செயலர் வானதி சீனிவாசன் கூறுகையில், ''பக்கத்து, பக்கத்து மாநிலங்களில் கூட, அவர்களால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை. பின், எப்படி நாட்டை வழிநடத்த முடியும். இந்த கூட்டணியை, நம்பி எப்படி மக்கள் ஓட்டளிப்பர். இந்த முரண்பட்ட கூட்டணியால், நல்ல ஆட்சி, நிலையான ஆட்சியை தர முடியாது.


ஒரு வேளை கேரளாவில், கம்யூ., வெற்றி பெற்றாலும், ராகுலை பிரதமராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்போது, தமிழக கம்யூனிஸ்ட்கள் என்ன செய்வர்; எனவே, இதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)