தேர்தல் பொறுப்பாளர் காங்.,கில் அதிருப்தி

தமிழக காங்கிரஸ் கட்சியையும், கோஷ்டி பூசலையும் பிரிக்க முடியாது என்பது, ஊரறிந்த விஷயம்.வேட்பாளராக போட்டியிடுவதற்காக தான், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து, தன்னை ராகுல் விடுவித்தார் என, திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர், திருநாவுக்கரசர் கூறி வருகிறார்.


பதவி போனாலும், 'சீட்' வாங்கி, செல்வாக்கை நிரூபணம் செய்த திருநாவுக்கரசர், தன் ஆதரவாளர்களை தக்க வைப்பதில் தீவிர கவனம் செலுத்துவதாக, காங்கிரஸ் எதிர் கோஷ்டிகள் பகிரங்கமாக குற்றம் சாட்ட தொடங்கியுள்ளன.காங்., கட்சி சார்பில், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனத்தில், தொகுதியில் ஓட்டு இல்லாத, அரிமளம் முன்னாள் யூனியன் சேர்மன் சுந்தர்ராஜ், 75, என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


அதேபோல், திருநாவுக்கரசர் நிழலாக வலம் வரும், மாநில செய்தி தொடர்பாளர் பென்னட் அந்தோணிராஜ், திருச்சி தொகுதி தேர்தல்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருச்சி லோக்சபா தொகுதியை பொறுத்தவரை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. இரு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மூத்த தலைவர்கள், முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் என, யாரையும் நியமனம் செய்யாத தால், கடும் அதிருப்தியடைந்த கோஷ்டிகள், சமூக வலைதளங்களில், தங்களின் அதிருப்தியை பதிவிட்டு வருகின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)