விஜயகாந்த் அவசர ஆலோசனை

கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க., கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்திரகுமார் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தினர். கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், கும்மிடிப்பூண்டி சேகர், பார்த்திபன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, 95 சதவீதம் பேர், தி.மு.க., உடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாகவும், மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தது தற்கொலைக்கு சமமானது என்றும் கூறிவிட்டு, 24 மணி நேரத்தில் விஜயகாந்த் பதிலளிக்க கெடு விதித்தனர். இதைதொடர்ந்து, போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக எம்.எல்.ஏ.,க்கள் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சந்திரகுமார் தரப்பினரும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)