அ.தி.மு.க., வேட்பாளர் மாற்றம்

அறிவித்த மறுநாளே அ.தி.மு.க.,வின் அருப்புக்கோட்டை வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். ஏப்ரல் 4ம் தேதி, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவித்த நிலையில், வழக்கம் போல் பட்டியலில் மாறுதல் இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில் அறிவிப்பு வெளியான மறுநாளே, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.ஜி.முத்துராஜாவை மாற்றி கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதியின் செயலாளராக கட்சிப் பணியாற்றி வந்த முத்துராஜாவின் மாற்றத்திற்கான காரணம் தெரியாத நிலையில், வைகை செல்வனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வின் இந்த அதிரடி, பிற தொகுதிகளிலும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)