Dinamalar.com

மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்தலாமா?



தேர்தல் செய்திகள்

இலங்கை பிரச்னையை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை : மு.க. ஸ்டாலின்

ஏப்ரல் 21,2009,19:32  IST


நாகர்கோவில் : 'இலங்கை பிரச்னையை அரசியல் ரீதியாக கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை' என்று அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். கன்னியாகுமரியில் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், பிரசாரத்தை துவக்கினால் எல்லா பகுதிகளுக்கும் சென்று சுலபமாக நிறைவு செய்ய முடியும். மற்றபடி சென்டிமென்ட், வாஸ்து இப்படி எல்லாம் கிடையாது.

 

கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் மக்கள் மத்தியில் அதிக எழுச்சி காணப்படுகிறது. அரசின் திட்டங்கள் மக்களை சென்று அடைந்துள்ளதன் அறிகுறி இது. இலங்கை பிரச்னையை அரசியல் ரீதியாக கிளப்பி விட்டுள்ளனர். மக்கள் இதை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை. இலங்கை பிரச்னையில் தி.மு.க., 1956 முதல் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். மதுரைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதல்வர் 30 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக வெற்றி இடங்களை மட்டும் குறிப்பிட்டிருக்கலாம். மனித நேய மக்கள் கட்சி இரண்டு லோக்சபா தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டனர். ஒரு லோக்சபா தொகுதி மட்டும் தருவதாக முதல்வர் கூறினார். அதை அவர்கள் ஏற்கவில்லை. பா.ம.க.,- கம்யூ., கட்சிகள் விலகி சென்றதால் தி.மு.க., கூட்டணி பலவீனமாகி விடவில்லை. அவர்கள் சென்றதால் செலவு குறைவு. வரவு அதிகம். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும். வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.



வாசகர் கருத்து  

definitely effected srilanka problem. DMK & CONGRESS no victory of this election.

by k raja,India
Posted on ஏப்ரல் 24,2009,16:46   IST

பயம் தெரிகிறது வார்த்தை இல்

by aarul aarulmmani,India
Posted on ஏப்ரல் 22,2009,22:04   IST

இந்த தேர்தலில் இலங்கை பிரச்சனை கண்டிப்பாக எதிர் ஒலிக்கும் காங்கரஸ் படு தோல்வி அடையும்

by RAJ RAJENDRAN,India
Posted on ஏப்ரல் 22,2009,19:34   IST

ஆமாம் தமிழ் மக்கள் எதைபற்றியும் கவலை படைத்தவர்கள் , திருப்பி திருப்பி ஒரே குடும்பத்திற்கு வட்டி கட்டுபவர்கள் , திருந்தாத ஜென்மங்கள் .அதனால் தி மு க கடசிக்கு கவலையில்லை ,நாட்டைபற்றியும் கவலையில்லை ,மக்களை பற்றியும் கவலையில்லை , தி மு க தலைவருக்கு தன் குடும்பத்தை பற்றி மட்டும் கவலை,

by n nanabala,India
Posted on ஏப்ரல் 22,2009,17:54   IST

நடப்பது இந்திய தேர்தல்.இதில் ஏன் இலங்கை பிரச்சனை?

by s மரியா alphonse,United Arab Emirates
Posted on ஏப்ரல் 22,2009,14:39   IST

 தேர்தல் முதல் பக்கம்  Back