தேர்தல் கிசு.. கிசு..

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு.. கிசு..

உடல்நிலையை காரணம் காட்டி, 'வேன் பிரசாரம் கூடாது' என, சூரிய கட்சித் தலைவருக்கு, மருத்துவர்கள், 'அட்வைஸ்' செய்ய, அதை ஏற்க மறுத்து அடம்பிடித்தாராம். குடும்ப உறுப்பினர்கள் மல்லுகட்டியதும் பயண திட்டம் மாற்றப்பட்டதாம்.


கை கட்சியின் முன்னாள் நிதியானவரை, கட்சித் தலைவி கலந்து கொண்ட சென்னை பிரசார

கூட்டத்துக்கு கட்டாயம் அழைக்க வேண்டும் என, மாநிலத் தலைவரிடம் சிலர் வேண்டுகோள் விடுக்க, அவர் மறுத்து விட்டாராம்.


கருத்துக் கணிப்பு முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை என்றதும், 'டென்ஷன்' ஆன முரசு தலைவர், கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்து, 'இது தொடர்பாக, கட்சியினர் யாரும் மக்களிடம் பேச வேண்டாம்' என, உத்தரவிட்டாராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016