சுயேட்சை வேட்பாளர் மீது வழக்கு

Tamilnadu Assembly Election News: சுயேட்சை வேட்பாளர் மீது வழக்கு

திருப்பூர் : தேர்தல் நடத்தை விதியை மீறி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக, திருப்பூர் வடக்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன், 28. அவிநாசி அருகே, அனுமதியின்றி மண் அள்ளிய கும்பல் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தவர்; மண் கடத்தலை தடுக்கச் சென்றபோது, கும்பலால் தாக்கப்பட்டவர். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றக்கோரி நடந்த போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.இவர், திருப்பூர் வடக்கு தொகுதியில், சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேர்தலில் பணம் பட்டுவாடா மற்றும் மது வினியோகத்தைத் தடுக்கக் கோரியும், தேர்தல் முடியும் வரை மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், வடக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் (திருப்பூர் ஆர்.டி.ஓ.) அலுவலகம் முன், 4ல் உண்ணாவிரத போராட்டம் துவக்கினார். தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன், வடக்கு போலீசில் புகார் அளித்தார். தேர்தல் நடத்தை விதியை மீறி, எவ்வித முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, அவர் மீது வழக்கு பதியப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு, வடக்கு போலீசார், அவரை கைது செய்தனர்; தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும், உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து, போராட்டத்தை தொடர்ந்தார். நேற்று, கலெக்டர் அலுவலகம் சென்று, உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தார்.

கலெக்டர் ஜெயந்தி, பிரபாகரனுடன் பேச்சு நடத்தினார். ""உங்களது கோரிக்கை, தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ய முடியாது. தேர்தல் பணி தொடர, போராட்டத்தை கைவிட்டு, ஒத்துழைக்க வேண்டும்,'' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.

இருப்பினும், "தேர்தல் பணிக்கு இடையூறின்றி, கோரிக்கை நிறைவேறும் வரை, உண்ணாவிரதம் தொடரும்' என, பிரபாகரன் தெரிவித்தார். தொடர்ந்து, அங்கேரிபாளையத்தில் உள்ள, லோக்சத்தா கட்சி அலுவலகத்தில், போராட்டத்தை தொடர்ந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016