ரூ.1.14 லட்சம் கோடி: தேர்தல் அறிக்கையில்சலுகை மழை

Tamilnadu Assembly Election News: ரூ.1.14 லட்சம் கோடி:  தேர்தல் அறிக்கையில்சலுகை மழை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை, முன்னறிவிப்பின்றி வெளியிடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடந்த, அ.தி.மு.க., பிரசார பொதுக்கூட்டத்தில், 2016 சட்டசபைதேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இலவச மின்சாரம், ஸ்கூட்டர் மானியம், விவசாய கடன் தள்ளுபடி என, 1.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகை மழை பொழியும் அந்த அறிக்கையில், பெண்களை கவரும் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதால், அனைத்து எதிர்க்கட்சிகளும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளன.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்* கூட்டுறவு வங்கிகளுக்கு, சிறு, குறு
விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர் கடன், நடுத்தர காலக்கடன், நீண்ட காலக்கடன் அனைத்தும் தள்ளுபடி.
* 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி, இலவச இணையதள வசதி.
* ஐந்து புதிய மருத்துவக் கல்லுாரிகள்.
* கருவுற்ற தாய்மார்களுக்கான நிதியுதவி, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 18 ஆயிரம்
ரூபாயாகஉயர்வு.
* 100 யூனிட் மின்சாரம், கட்டணம் எதுவுமில்லாமல் அனைத்து வீடுகளுக்கும் இலவசம்.
* பொங்கல் திருநாளுக்கு கோ - ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க, அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும், 500 ரூபாய்க்கான பரிசு கூப்பன்.
* அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு, இலவச 'செட்டாப் பாக்ஸ்'
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலவச மொபைல் போன்.
* தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு, காலை சிற்றுண்டி; வைட்டமின் ஏ, வைட்டமின் டி
இலவச மாத்திரைகள்.
* ஆவின் பால், ஒரு லிட்டர், 25 ரூபாய்.
* திருமண உதவி திட்டத்தில் வழங்கப்படும், நான்கு கிராம் தங்கம், எட்டு கிராமாக உயர்வு.
*வீட்டுக்கு ஒருவருக்கு வேலை.
* வேலை கிடைக்காதவர் கல்வி கடனை, அரசே செலுத்தும்.
* மகளிர்களுக்கு, இரு சக்கர வாகனங்கள் வாங்க, 50 சதவீதம் மானியம்.

இது தவிர, படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன செய்வார்கள்?:இதுவரை மற்ற கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இவ்வளவு சலுகைகளும் இலவசங்களும் இல்லை. அ.தி.மு.க., அறிக்கையில் உள்ள சலுகைகள் இளம் பெண்களை கவரும் விதத்தில் இருப்பதாக அனைத்து கட்சியினரும் கருதுகின்றனர். இதனால், அடுத்த சில நாட்களில், மற்ற கட்சிகளும், தங்கள் அறிக்கைகளில் உள்ளவற்றுக்கு மேலாக
சலுகைகளை அறிவிப்பார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

அ.தி.மு.க., அறிக்கையை தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட வேறு கட்சி தலைவர்கள் உடனடியாக விமர்சிக்காதது, இந்த கேள்விக்கு வலு சேர்த்து உள்ளது.
நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016