தேர்தல் கிசு.. கிசு..

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு.. கிசு..

தலைவர் மற்றும் தளபதி போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்ய ஆசைப்படுகிறேன் என, கை கட்சியின் பூ நடிகை ஆசைப்பட்டாராம். ஆனால், சூரிய கட்சியில் இதுவரை அசைந்து கொடுக்கவில்லையாம்.

கல்விக் கடவுள் பெயர் கொண்ட இலை கட்சிப் பெண்மணி, 'டிவி' விவாதம் போல, தான் போட்டியிடும் தொகுதி பற்றி பேசக் கூப்பிட்டதும் ஓடோடி சென்றாராம். அங்கு, எல்லா கட்சி வேட்பாளர்களும் இஷ்டத்துக்கும் கேள்வி கேட்க, நொந்து போய் விட்டாராம்.


கருத்துக் கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக இல்லை என்றதும், கட்சி வேட்பாளர்களை அழைத்து பேசிய மாம்பழ கட்சியின் தலைவர், 'தொகுதி யில் நல்லா வேலை பாருங்கன்னு சொல்றாங்க; பயப்படாதீங்க' என, பாசிட்டிவாக பேசி அனுப்பினாராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016