கவித... கவித....

Tamilnadu Assembly Election News: கவித... கவித....

காதலர் கூட்டணி அன்பே ஆருயிரே என் உயிரில் உறைந்த உறவே

என்னுள் ஓர் எண்ணம்

இடையறாது ஓடுகிறது

உன்னிடம் தானே பரிமாற வேண்டும்

வேறு யார் இருக்கிறார்கள் எனக்கு

கூறுங்களேன் என்கிறாயா?

கார் காலம், உதிர் காலம்

முன், பின்பனிக் காலம்

வேனில், இளவேனில், முதுவேனிற் காலம்

என்றெல்லாம் காலங்கள் பிரிக்கப்பட்டன

நிகழ்காலமோ தேர்தல் காலம்

அதற்கான கூட்டணி காலம்

அவர் இவருடன் கூட்டணி

இவர் அவருடன் கூட்டணி

இவர்களும் அவர்களும்

இணைந்து கூட்டணி

ஏன் நமக்குள் இருக்கக்கூடாது

இப்படியோர் கூட்டணி

நமக்குள் மட்டுமே செயல்படும்

காதலர் கூட்டணி!


என்.நன்மாறன்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

முன்னாள் எம்.எல்.ஏ., மதுரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016