110வது விதி அறிவிப்புகளின் நிலை: ஜெ., விளக்கம்

Tamilnadu Assembly Election News: 110வது விதி அறிவிப்புகளின் நிலை: ஜெ., விளக்கம்

சென்னை: சட்டசபையில் வெளியிடப்பட்ட, 110வது விதியின் கீழான அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டவை குறித்து, நேற்று முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டுள்ளார்.


அவரது அறிக்கை:
சட்டசபை விதி 110ன் கீழ், வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைகள் மூலம் நடந்த பணிகள் குறித்த
பட்டியல் -

நகராட்சி நிர்வாகம்:*சுற்றுச்சூழலை பாதுகாக்க, சென்னை மாநகராட்சியில் சிறப்பு துாய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
*புதுக்கோட்டை நகராட்சி நுாற்றாண்டு நிறைவையொட்டி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, சிறப்பு உதவித்தொகையாக, 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன
*மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூதுாத்துக்குடி, வேலுார், ஈரோடு மாநகராட்சிகளில், தலா, 10 இடங்களில், 'அம்மா' உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இளைஞர்நலன்*ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில், பதக்கம் பெற வாய்ப்புள்ள, திறன் வாய்ந்த, ஐந்து உயர்நிலை விளையாட்டு வீரர்கள், உயர்மட்டக் குழுவினரால்
தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வரப்படுகிறது
* கிராம மக்கள் இடையே, விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன
*தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் போல், 'முதலமைச்சர் கோப்பைக்கான மாநிலப் போட்டிகள்' ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.இவ்வாறு முதல்வர் ஜெ., தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016