கவித... கவித...

Tamilnadu Assembly Election News: கவித... கவித...

தேர்தல் ஐயா வர்றாரு

வர்றாரு... வர்றாரு... அழகர் வர்றாரு...

(பாடல் பாணியில் பாடலாம்)

வர்றாரு... வர்றாரு... தேர்தல் ஐயா வர்றாரு...

மே 16ம் தேதி வர்றாரு...

சங்கடம் தீர்க்கப் போறாரு...

ஜாதி ஜனங்க நோய் தீர்க்க

சகல பாக்கியம் தரப்போறாரு...

(வர்றாரு... வர்றாரு...)

விதிகளை பின்பற்றி பிரசாரம்

பண்ண சொல்றாரு...

பிரசாரத்துல சண்டை சச்சரவு

கூடாதுன்னு சொல்றாரு...

அனைவரையும் பாதிக்கும்

அதிக ஒலி கூடாதுங்கிறாரு...

மேடையில ஆபாச

நடனங்கள் வேணாங்கிறாரு...

சாதனைகளை சொல்லியே

ஓட்டு கேட்க சொல்றாரு...

(வர்றாரு... வர்றாரு...)

அனைவரும் தவறாம

ஓட்டளிக்கச் சொல்றாரு...

பணம் காசு வாங்காம

ஓட்டளிக்க சொல்றாரு...

கள்ள ஓட்டை தடுக்க

காலையில ஓட்டு போடுங்கிறாரு...

வாக்காளர் அட்டையுடன்

வரிசையில வாக்களிக்க சொல்றாரு...

(வர்றாரு... வர்றாரு...)

அமைதியான ஓட்டு எண்ணிக்கை

அவசியமுன்னு சொல்றாரு...

எந்த கட்சி ஜெயிச்சாலும்

ஏத்துக்க சொல்றாரு...

ஜெயிச்ச கட்சி ஸ்திரமான

ஆட்சி அமைக்க ஆசிங்கிறாரு...

(வர்றாரு... வர்றாரு...)

புதிய ஆட்சியில நாடு பொலிவு

பெறப் போகுதுன்னு சொல்றாரு...

மதுவிலக்கு அமலாகி

மாநிலம் செழிக்கும்கிறாரு...

வேலையில்லா திண்டாட்டம்

மாற்றி வேலை கொடுக்க செய்வாரு...

எல்லாருக்கும் எல்லாமும்

கிட்ட இறைவனாக வர்றாரு...

(வர்றாரு... வர்றாரு...)

எம்.ரமேஷ்பாபு, மதுரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016