கவித... கவித...

Tamilnadu Assembly Election News: கவித... கவித...

அறியாமை போக்குவோம்... ஓடி ஓடி வருகிறார் ஓட்டுக்காக கெஞ்சுகிறார்

கூடி கூடி பேசுகிறார்

கூழை கும்பிடு போடுகிறார்

யார் யாரோ வருகிறார்

எதேதோ பேசுகிறார்

ஒன்றுமே புரியவில்லை

ஒப்பாரி வைக்கிறார்

காசு பணம் கொடுக்கிறார்

கால்களிலும் விழுகிறார்

கரைவேட்டி கட்டிக்கொண்டு

கார்களிலே பறக்கிறார்

ஐந்தாண்டு வராதவர்

அண்டி அண்டி வருகிறார்

தேனொழுக பேசுகிறார்

'தெய்வமே' என்கிறார்

கூட்டத்தை கூட்டுகிறார்

கோடி கும்பிடு போடுகிறார்

அத்தனையும் பகல் வேஷம்

ஐந்தாண்டை ஒப்படைக்க

அஞ்சு நிமிஷம் யோசிப்போம்

அறியாமை போக்குவோம்


எஸ்.பழனிச்சாமி, ராமநாதபுரம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016