தேர்தல் கிசு... கிசு...

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு... கிசு...

வேட்பு மனு பரிசீலனையின் போது, சமத்துவத் தலைவரின் மனுவை ஏற்கக்கூடாது என, எதிர்ப்பவர்கள் பலரும் சொல்ல, பதற்றத்தில், 'நான் இலை கட்சிக்காரன் தான்' என, அக்கட்சியின் உறுப்பினர் அட்டையை எடுத்து போட்டாராம் சமத்துவம்.

'வரும் தேர்தலில் இலை கட்சியை வீழ்த்துவேன்' என சபதமிட்ட முரசு தலைவர், புது அணி என சொதப்பியதால் கோபமடைந்த உளுந்துார் மக்கள், தலைவரின் மச்சானிடம் பிரசாரத்தின் போது கேள்வி மேல் கேள்வி எழுப்ப, தடுமாறுகிறாராம்.


'அவரைப் பற்றி, பிரசாரத்தில் எதுவுமே பேச வேண்டாம்' என, சூரிய கட்சியின் தலைவர்,

தனயனுக்கு உத்தரவிட்டுஉள்ளாராம். இதனால், கறுப்புத் துண்டு தலைவர் பற்றி, தளபதியானவர் பிரசாரத்தில் மறந்தும் கூட எதுவும் பேசுவதில்லையாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016