கவித... கவித...

Tamilnadu Assembly Election News: கவித... கவித...

நானோரு கிங்கு

'சிந்துபைரவி' படத்தில் வரும் 'நானொரு சிந்து காவடி சிந்து' எனும் பாடல் மெட்டில் படிக்கவும்

இடம்: கோபாலபுரம், பாடுபவர்: கருணாநிதி

நானொரு கிங்குஅரசாண்ட கிங்கு

ஆட்சி எதுவுமில்ல

பதவியும் ஒண்ணுமில்ல

கட்சி இருந்தும்

தொண்டர் இருந்தும்

கூட்டணிக்கு யாரும் வரல்ல

அதைச் சொல்ல

தெரியவில்ல...

நானொரு

லெட்டர்பேடு கட்சிக்கு எத்தனை சீட்டோ

அத்தனை கட்சிக்கும் டெபாசிட் இருக்கோ...?

கேப்டனை நாளும் நம்பித்தான் வீணே

பழம் விழும் என்றே பரிதவித்தேனே

கூடாநட்பென்று கைவிட்ட கையை

கண்களும் பனிக்க கைகலந்தேனே

காங்கிரஸ் கட்சிக்கு

தலைவர்கள் உண்டு

தொண்டர்கள் யாருமில்ல

அதைச் சொல்ல

தெரியவில்ல...

நானொரு

தோளோடு தோள்நின்ற

தோழர்கள் இல்ல

வாய் கொண்டு போராடும்

வைகோவும் இல்ல முன்பு

சேராத கட்சிக்கு நான் வைப்பேன் ஆப்பு

இப்போ நான் அறிவிச்ச வேட்பாளருக்கு

அங்கங்கே ஆப்பு...

திருமாவு மில்ல

வாசனும் வரல்ல

கூட்டணி யாருமில்ல

அதைச் சொல்ல

தெரியவில்ல...

நானொரு

மதுரைக்கு தெற்கே அரசாண்ட பிள்ளை

அரசாளும் ஆசையில் இங்கொரு பிள்ளை

திருமங்கலம் பார்முலா உயிர்ப்பித்த நானே

வகைதொகையில்லாமல் மாட்டிக்கொண்டேனே

வாட்ஸ்ஆப் யுகத்தில்

பேஸ்புக் தளத்தில்

வாய்ப்பேச்சு கேட்க ஆட்களுமில்ல

கூட்டமும் இல்ல

அதைச் சொல்ல

தெரியவில்ல...

நானொரு


சி.ஜெயவீரன்,

கொடைக்கானல், திண்டுக்கல்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016