அறிவிக்கப்படாத மின்வெட்டு: இளங்கோவன் குற்றச்சாட்டு

Tamilnadu Assembly Election News:  அறிவிக்கப்படாத மின்வெட்டு: இளங்கோவன் குற்றச்சாட்டு

சென்னை:'அ.தி.மு.க., ஆட்சியில், ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை' என, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், '2013ம் ஆண்டுக்குள், 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்' என, ஜெயலலிதா வாக்குறுதி வழங்கியிருந்தார்.தற்போது, தமிழகத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. அதைத் தவிர பல இடங்களில், சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்பட்டு, கோடை காலத்தில், மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


அ.தி.மு.க.,வின் ஐந்தாண்டு ஆட்சியில் எந்த முதலீடும் செய்யாத காரணத்தால், ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை. கடந்த தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட மின் திட்டங்களின் மூலமாகத் தான் தற்போது, மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறதே தவிர, புதிதாக மின் உற்பத்தி செய்ய, ஜெயலலிதா அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.


தற்போது, தமிழகத்தின் மின் தேவை, 15,400 மெகாவாட் ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், தற்போது, 13 ஆயிரம் மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக, அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதால் விவசாயம், தொழில், நெசவாளர்கள் என, அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016