'சாராய கம்பெனி முதல்வர்கள் உண்டா': சீமான் கேள்வி

Tamilnadu Assembly Election News: 'சாராய கம்பெனி முதல்வர்கள் உண்டா': சீமான் கேள்வி

நத்தம்: நத்தத்தில் நாம் தமிழர் வேட்பாளர் சிவசங்கரனை ஆதரித்து மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

ஒரு நாட்டை அழிக்க வெடி குண்டு தேவையில்லை. அதன் மொழி, கலாச்சாரத்தை அழித்தால் போதும். அழிந்து வரும் தமிழை மீட்பது ஒவ்வொருவரின் கடமை.

கருணாநிதி மற்றும் ஜெ., நடத்துவது அரசியல் அல்ல அதிகாரம். அது அவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. மக்களுக்கு அல்ல. கருணாநிதி நடத்துவது குடும்ப அரசியலா அல்லது தனியார் கம்பெனியா என தெரியவில்லை. ஐம்பது ஆண்டுகளாக ஊழல், மதுவை வளர்த்துவிட்டு, இப்போது அதை ஒழிப்போம் என்கின்றனர். எந்த மாநிலத்திலும் சாராய கம்பெனி நடத்தும் முதலமைச்சர்கள் இல்லை.

தமிழகத்தில் மட்டுமே உள்ளனர். மடிக்கனினியை இலவசமாக தரும் அரசு ஏன் குடிநீரை பாட்டிலில் விற்க வேண்டும்.

ஒட்டன்சத்திரம்: ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை. ஒரு மனிதனுக்கு கனடாவில் 8953 மரங்களும், ரஷ்யாவில் 4461 மரங்களும், அமெரிக்காவில் 216 மரங்களும், நம்மைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் 102 மரங்களும் உள்ளன. ஆனால் இந்தியாவில் ஒரு மனிதனுக்கு 28 மரங்கள் மட்டுமே உள்ளன. மரங்கள் இல்லை என்றால் மழை வருவது எப்படி. சுவாசத்தை பெறுவது எப்படி.

இந்த 50 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில் இதற்கு ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்துள்ளனரா? மரங்களை வெட்டி விற்க நடவடிக்கை உள்ளது.

நட்டு வளர்ப்பதற்கு என்ன நடந்திருக்கிறது? இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016