கவித... கவித...

Tamilnadu Assembly Election News: கவித... கவித...

மைகோ மக்களை பார்த்து பாடும் தேர்தல் பாடல்

('அந்நியன்' படப்பாடல் ராகத்தில்)


சஞ்சானே தோனே தானே நேனானோ மக்களே...

என் தேர்தல் ஆசை சிக்கி முக்கி திக்கி...விக்குது மக்களே

என் நெஞ்சு விம்மி பம்மி...நிக்குது மக்களே

என் வார்த்தை கடல் வற்றி...விட்டதே

நான் தோற்று போவேன் என்று அஞ்சியே

தேர்தலை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்...

என் மனம் ஒரு குரங்கு... மரத்துக்கு மரம் தாவுது...

மக்களே

- என் தேர்தல் ஆசை

இந்த தேர்தல் என்ன பெரும் பாரமா...

இது பேறு காலம் இல்லா கர்ப்பமா...

முதல்வர் ஆசையை மறைத்தால்... கணம் தாங்காமல்

என் உயிர் இத்து போகும் இல்லையா...

தேர்தலில் நின்று... தோற்று போனால்

என் மானம் காற்றில் பறக்கும் இல்லையா...

பல தேர்தலை பார்த்தாலும்... மக்கள் மனதை

முழுசாய் புரிந்து கொள்ள முடியவில்லை...

இந்த தேர்தல் போனால்... நான் நிற்க

இன்னொரு தேர்தல் இல்லையா...

மக்களே

- என் தேர்தல் ஆசை

நான் ஓட்டு கேட்கும் ஒரு ஊமையா

தினம் ஊரு ஊராய் நடக்கிறேன் இது தேவையா...

பைகள் நிறைய மனுக்களை நிரப்பி

தேர்தல் ஆபிசை தேடி நடக்கிறேன்...

அலுவலரை பார்த்து கும்பிட்டு முடித்து

மனுவை கொடுக்க மறுக்கிறேன்...

அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்

பூமியில் உள்ளான் எவன்...

மனுதாக்கல் செய்து தேர்தலில் நிற்கும் தைரியம் உள்ளவன்

அவன்...அவன்... அவன்...

மக்களே

- என் தேர்தல் ஆசை


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016