அ.தி.மு.க.,வுக்கு ராமதாஸ் கண்டனம்

Tamilnadu Assembly Election News:  அ.தி.மு.க.,வுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தேனி மாவட்டம், போடி தொகுதியில் போட்டியிடும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று, ஆதிப்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பணம் தரப்பட்டுள்ளது.

அதை, மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் படம் பிடித்ததால், ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர், அவரை தாக்கினர். காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016