விஜயகாந்த் மீது சீமான் தாக்கு

Tamilnadu Assembly Election News: விஜயகாந்த் மீது சீமான் தாக்கு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இல.மகாதேவனை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

தேர்தலில் பணம் இருந்தால் போட்டியிட முடியும் என்ற நிலையுள்ளது. திராவிட கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. மதுவைத் தவிர வேறு

வசதிகளை மக்கள் காணவில்லை.

எங்கும் ஊழல், லஞ்சம் நிலவுகிறது. ஆனால் மது மற்றும் ஊழலை ஒழிக்கப் போவதாக இரு கட்சிகளும் பேசுகின்றன. விஜயகாந்த் முதல்வராக துடிக்கிறார்.

முடிவு எடுக்க முடியாத தலைவர் அவர். தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என ஆறு மாதங்கள் முடிவு எடுக்க முடியாமல், திடீரென மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து விட்டார், என்றார்.

குடிமகன் தகராறு

அலங்காநல்லுாரில் வேட்பாளர் சக்தியை அறிமுகம் செய்து சீமான், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதியை சாடினார். போதையில் இருந்த குடிமகன் ஒருவர், ''அம்மாவை வையாதே,'' என்றதால் பதட்டம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் அவரை வெளியேற்றினர். இதை சுட்டிகாட்டிய சீமான், ''திராவிட கட்சிகளின் ஆட்சி அவலத்திற்கு இந்த காட்சி தான் சாட்சி,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016