தி.மு.க., பாராட்டு விழா அ.தி.மு.க., பதவியேற்பு விழா சீமான் காட்டம்

Tamilnadu Assembly Election News: தி.மு.க., பாராட்டு விழா அ.தி.மு.க., பதவியேற்பு விழா சீமான் காட்டம்

நிலக்கோட்டை: அ.தி.மு.க., ஆட்சியென்றால் அடிக்கடி புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களும், தி.மு.க., என்றால் கருணாநிதிக்கு பாரட்டு விழாக்களும் நடத்தி மக்களை ஏமாற்றுவதாக

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசினார்.

நிலக்கோட்டை, நத்தம், திண்டுக் கல்லில் அவர் பேசியதாவது,“மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, கல்வி அவசியமானது. இவற்றை தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சிகளும் விற்று விட்டன. குடிநீரை உறிஞ்சி எடுக்க தனியாருக்கு அ.தி.மு.க., அரசு துணையாக இருக்கிறது.

இலவசம் கொடுத்து மக்களை

பிச்சைக்காரர்களாக மாற்றி விட்டனர். 94 வயது தாத்தாவும், 65 வயது பாட்டியும் முதல்வராகி என்ன செய்ய போகின்றனர். மாற்றம் என்பது புதிய தலைமுறை நபர்களுக்கு வாய்ப்பு அளிப்பதுதான் மாற்றமாகும். அ.தி.மு.க., தி.மு.க., காங்., பா.ஜ., ஆகியவை ஏமாற்றம் அளித்து விட்டன. எனவே எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் நாங்கள் மாற்றத்தை தருகிறோம்”.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016