கவித கவித... அரசியல் ஆபரேஷன்

Tamilnadu Assembly Election News:  கவித கவித... அரசியல் ஆபரேஷன்

ஓட்டுப் போட போகலாமா?


'பள்ளிக்கூடம் போகலாமா...

அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா...'

பாடல் பாணியில்


ஓட்டு போட போகலாமா

தேர்தலுக்கு ஓட்டு போட போகலாமா

அதுக்கு துட்டு கிட்டு வாங்கலாமா

பொய் வாக்குறுதிகள கேட்கலாமா

மக்கள் மனச சுத்தவிட்டு பாக்கலாமா

எல்லாருக்கும் தெரிஞ்ச பாடம்

பட்டாலுமே புரியாத பாடம்

அட மக்களே மக்களே மக்களே வாங்க

ஓட்டுப் போட போகலாமா

மக்கள் மனதில் இருக்கு புதுக் கணக்கு

சொன்னா புரியும் அது உனக்கு...

தேர்தல் முடிஞ்ச பிறகு

தெரியும் அது நமக்கு...

செய்வீர்களா...

முடியட்டும் விடியட்டும்... த்துா...

மாற்றம்... முன்னேற்றம்... கேட்க சுகம் நமக்கு...

நடக்கிற தேர்தல மக்கள் எல்லாரும்

நேர்மையா ஓட்டுப் போட வேணும்

ஏதோ ஏதோ மாற்றம் வரணும்

தனியா யோசிச்சு லாபமில்ல

எல்லா மக்களும் சேர்ந்தா...

மாற்றம் வராம போனதில்ல

அஞ்சு வருஷத்துக்கு

ஒருவாட்டி படிக்கிற பாடம்

அதுதான் தேர்தல் எனும் பாடம்

இது வருஷமெல்லாம் நடந்தாலும்

அலுக்காது ஹோய்

நமக்கிந்த தேர்தல் பாடம்

சலிக்காது ஹோய்

அட ஒவ்வொரு ஓட்டுக்கும்

மதிப்பிருக்கு ஹோய்

அதுதான் தமிழ்நாட்டு

தலையெழுத்த மாத்தும்

ஓட்டாகும் ஹோய்

ஓட்டுப் போட போகலாமா


-எம்.பாலமுருகன், விருதுநகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016