'அரசு ஊழியர்கள், போலீஸ் நலவாரியம் அமைக்கப்படும்'

Tamilnadu Assembly Election News:  'அரசு ஊழியர்கள், போலீஸ் நலவாரியம் அமைக்கப்படும்'

'அரசு ஊழியர்கள், போலீஸ் நலவாரியம் அமைக்கப்படும்' என, தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை, மேலிட பொறுப்பாளர், முகுல் வாஸ்னிக் நேற்று வெளியிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
● மீண்டும் மேலவை கொண்டு வரப்படும். அதில், திருநங்கைகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும்
● லோக் ஆயுக்தா அமைக்கப்படும்
● பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்● குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்
● கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்
● உழவர் சந்தைகள் விரிவுபடுத்தப்படும்
● சொட்டு நீர் பாசனத்திற்கு, 100 சதவீதம் மானியம் வழங்கப்படும்
● தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களும் ரத்து செய்யப்படும்
● சூரிய சக்தி மின்சாரத்தை விவசாயிகள் பயன்படுத்த, 100 சதவீத மானியம் வழங்கப்படும்
● தமிழக மக்களின் அடையாள சின்னமாக கருதப்படும், பனை மரங்கள் பாதுகாக்கப்படும்
● 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம், 2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்
● ஏரி, குளம், குட்டைகள் துார் வாரப்படும்
● இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்
● பிரீ கே.ஜி., முதல் முதுகலை வரை அனைத்து மாணவர்களுக்கும், எவ்வித வேறுபாடும் இல்லாமல், இலவசக் கல்வி வழங்கப்படும்
● தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம், நன்கொடை வசூலிப்பது தடை செய்யப்படும். உயர் கல்வி, உலக தரத்திற்கு ஈடாக, மாற்றி மைக்கப்படும்
● ஒவ்வொரு மாவட்டத்திலும், மருத்துவ கல்லுாரி அமைக்கப்படும்
● மின் உற்பத்தி பெருக்கப்படும்
● குடும்ப அட்டை கோருபவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும்
● அரசு ஊழியர் நல வாரியம், காவலர் நல வாரியம் அமைக்கப்படும்
● சிறுபான்மையினரின் மத ரீதியான ஆன்மிக பயணங்களுக்கு உரிய உதவிகள் செய்து தரப்படும்
● தமிழகத்தில் உள்ள மீனவர் சமுதாயத்தினரை, பழங்குடியினரின் பட்டியலில் சேர்க்க, ஆவன செய்யப்படும்
● விபத்தில் இறக்கும் அனைத்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும், 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படும்
● நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க, ஆவன செய்யப்படும்
● அனைத்து முதியோர்களுக்கும் பேருந்தில் இலவச கட்டண சலுகை வழங்கப்படும். முதியோர் மதிய உணவுத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்
● கூவம் சீரமைப்புத் திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும்
● மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்
● சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும்
● அத்திக்கடவு - அவிநாசி திட்டம், செண்பகவல்லி அருவி நீர்த்தேக்க திட்டம், எலுமிச்சை ஆறு அணை திட்டம், நொய்யல் நதி மீட்பு திட்டம், தாமிரபரணி நீர் திட்டம், தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு, வெள்ளைநீர் கால்வாய் திட்டம், பம்பா, அச்சன்கோயில் வைப்பாறு இணைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு காலவரையறை நிர்ணயம் செய்து நிறைவேற்றப்படும்
● சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்
● சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தை மீண்டும் தொடங்க, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
● அண்ணா நுாற்றாண்டு நினைவு நுாலகத்தை, சர்வதேச தரத்தில் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016