எஸ்.பி.,யை சுட்டு கொல்ல முயற்சி; அரசுக்கு கருணாநிதி சரமாரி கேள்வி

Tamilnadu Assembly Election News:   எஸ்.பி.,யை சுட்டு கொல்ல முயற்சி; அரசுக்கு கருணாநிதி சரமாரி கேள்வி

சென்னை, : 'அதிர்ச்சி தரும் அய்யம்பாளையம் சம்பவத்தில், தொடர் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:

அ.தி.மு.க., அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவரும், அவர்களுடைய அனைத்து விவகாரங்களையும் உடனிருந்து கவனித்து வருபவருமான, கரூர் -அய்யம்பாளையத்தை சேர்ந்த அன்புநாதன் வீடு மற்றும் கிடங்கு ஆகியவற்றில் சோதனை நடத்தியவர், கரூர் எஸ்.பி., வந்திதா பாண்டே.வேகமாக வந்து...

ரெய்டுக்குப் பின், அவருக்கு தொடர்ந்து
மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கரூர் எஸ்.பி., அலுவலகத்திற்கு ஒருவர் வேகமாக ஓடி வந்து, எஸ்.பி.,யைப் பார்க்க வேண்டும் என, அவசரப்பட்டிருக்கிறார். மிகுந்த பதற்றத்தோடு காணப்பட்ட அவர், எஸ்.பி.,யின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அந்த நபர்எஸ்.பி., யிடம் கொடுத்த பையில் துப்பாக்கி ஒன்று இருந்திருக்கிறது. அப்போது எஸ்.பி.,யிடம் அந்த நபர், உங்களைச் சுட்டுக் கொல்லும்படி, முகமூடி அணிந்திருந்த இரண்டு பேர் தெரிவித்தனர். எஸ்.பி.,யை சுட்டுக் கொன்றால், 10 லட்சம் ரூபாய் தருகிறோம்; கொல்லா விட்டால், உன்னை சுட்டுக் கொன்று விடுவோம் என, மிரட்டினர். நான் பயந்து விட்டேன். என்னைக் காப்பற்றுங்கள்' எனக் கூறி எஸ்.பி.,யிடம், அந்த நபர் கதறி அழுததாகவும், செய்தி வெளியாகிஇருக்கிறது.

அதே நேரத்தில், வந்திதா பாண்டே தற்கொலைக்கு முயன்றதாக, அன்புநாதனின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வதந்திஒன்றை பரப்பியிருக்கின்றனர். கரூர் -அய்யம்பாளையத்தில், ஏற்கனவே நடந்த சம்பவமும், நேற்று, கரூர் எஸ்.பி.,யை சுட்டுக்கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் சாதாரணமான நிகழ்வுகள் அல்ல. எஸ்.பி.,யைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி, தமிழக காவல் துறைக்கு, தனி நபர்கள் சிலரால் விடப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால். வினோதம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016