சொந்த வீடு இல்லைசீமான் சொத்து விவரம்

Tamilnadu Assembly Election News:  சொந்த வீடு இல்லைசீமான் சொத்து விவரம்




கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மாற்று வேட்பாளராக, அவரது மனைவி கயல்விழி மனு தாக்கல் செய்தார். திரைப்பட இயக்குனராக உள்ளதுடன், விவசாயமும் செய்து வரும் சீமான் சமர்ப்பித்துள்ள சொத்து மதிப்பு விவரம்:
* ரூபாய், 31 லட்சம் மதிப்புள்ள ஜப்பான் கார் உள்ளிட்ட இரண்டு கார்கள்
* மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் தங்க நகைகள்
* வங்கியிருப்பு உட்பட, 35 லட்சத்து 36 ஆயிரத்து 177 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகள்
* வீடு, நிலம், குடியிருப்பு போன்ற அசையா சொத்துகள் ஒன்றும் இல்லை.
வங்கிக் கடனாக, 8 லட்சத்து 97 ஆயிரத்து 557 ரூபாய் உள்ளது மாற்று வேட்பாளர் கயல்விழியின் சொத்து விவரம்:
* ரூபாய், 16 லட்சம் மதிப்புள்ள கார்.
* ரூபாய், 33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள, 1,600 கிராம் தங்க நகைகள். 52 லட்சத்து 25 ஆயிரத்து 31 ரூபாய் அசையும் சொத்துகள்.
* ரூபாய், 29 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகள்.
மனு தாக்கல் செய்துள்ள சீமான், தன் மீது ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் ஈரோடு கோர்ட்டுகளில் வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016