110 வது விதியின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: பட்டியலிட்டு ஜெ., அறிக்கை

Tamilnadu Assembly Election News:  110 வது விதியின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: பட்டியலிட்டு ஜெ., அறிக்கை

சென்னை: கடந்த ஐந்து ஆண்டுகளில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டு உள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டசபை விதி 110ன் கீழ், நான் வெளியிட்ட சில அறிவிப்புகளை பட்டியலிட்டு உள்ளேன்.வருவாய் துறையில், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம், மார்ச் 31ம் தேதி வரை, 3,040 கோடி ரூபாய் அளவுக்கு, 37.68 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 கோடி ரூபாய்
மதிப்பில், மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம் அமைப்பதற்கான கருத்துரு ஆய்வில் உள்ளது. தற்போது தற்காலிகமாக, சென்னை, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், அலுவலர்களுக்குபேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மொத்தம், 1,481 கோடி ரூபாய் மதிப்பிலான, கடலோர பேரிடர் இன்னல்கள் குறைக்கும், ஐந்தாண்டு திட்டத்தில், 45 சதவீதப் பணிகள், 695 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டு உள்ளன.

இத்திட்டம், 2018 ஜூலை 31ல் முடியும்.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையில், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், 64.70 கோடி ரூபாய் செலவில், 38 ஆயிரத்து, 505 மாணவர்களுக்கு, இலவச லேப் - டாப்வழங்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், திருவள்ளூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு, சொந்த கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறை மூலம், இணைய வழி
தொலைக்காட்சி சேவை வழங்க, சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் வாங்க, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016