கவித... கவித...

Tamilnadu Assembly Election News: கவித... கவித...

தலைவரு திமிங்கலம்...

வைகோ தானுங்கோ

(வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பாணி)

வைகோவுக்கும்விஜயகாந்துக்கும் கூட்டணி

அந்த காம்ரேட்கள் எல்லாம்

கைதுாக்கி கொண்டாட்டம்

தாயகத்தில் நடக்குதய்யா சந்திப்பு

அங்கு மா.செ.,க்கள்லாம் கும்மாளம்...

கூட்டணியாம் கூட்டணி

இது மக்கள் நலக் கூட்டணி...

கூட்டணியாம் கூட்டணி

இது மக்கள் நலக் கூட்டணி (வைகோவுக்கும்...)

பிரசாரத்தில் பாடி வரும்

திருமா அணி பார்ட்டியும்...

அய்யா மேளதாளம் முழங்கி

வரும் ஜி.கே.வாசன் வாத்தியம்...

ஞானதேசிகன் நடந்து வர்றார் நாட்டியம்...

நம்ம ஞானதேசிகன் நடந்து வர்றார் நாட்டியம்...

அங்கு ரைமிங் ஆக பேசுதய்யா பிரேமலதா

பிரசாரம்... பிரேமலதா பிரசாரம்...

(வைகோவுக்கும்...)


ஜெயிக்க வேண்டிய தொகுதி

அது ஆர்.கே.நகர் தானுங்க...

இது தெரிஞ்சிக்கிட்ட உளவுத்துறை

வச்சதைய்யா வத்தீங்கோ...

பஞ்சாயத்து தலைவருன்னா

விஜயகாந்த் தானுங்கோ...

அவரிடம் அடி வாங்காம தப்பிப்பது

நடக்குற காரியம் இல்லைங்கோ...

காரியம் இல்லைங்கோ... (வைகோவுக்கும்...)


மாப்பிள்ளை ரவிக்குமார்

மீசைக்கார கட்சிங்க...

இங்கு தொகுதி பங்கீடு

வேட்பாளர் தேர்வு

கலகலன்னு இருக்குதுங்கோ...

வீரத்துக்கு ஒதுக்கியது

பல்லாவரம் தானுங்கோ...

இதனால எதிர்க்கட்சிகள்

எல்லாம் மகிழ்ச்சியில திளைக்குது...

மகிழ்ச்சியில திளைக்குது... (வைகோவுக்கும்...)


தலைவரு விஜயகாந்த்

உளுந்துார்பேட்டை தானுங்கோ....

அண்ணன் திருமாவுக்கு தந்தது

காட்டுமன்னார் கோவிலுங்கோ...

இந்த கூட்டணியை நடத்தி வைக்கும்

ஜி.ஆர், முத்தரசனுமுங்கோ...

இந்த கூட்டணியை

வாழ்த்துகிற பெரிய மனுஷன் யாருங்கோ...

தலைவரு திமிங்கலம் வைகோ தானுங்க...

(வைகோவுக்கும்...)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016