தி.மு.க., பொய் பிரசாரம்: ஜெ., புகார்

Tamilnadu Assembly Election News:  தி.மு.க., பொய் பிரசாரம்: ஜெ., புகார்

சென்னை:'சட்டசபையில், 110வது விதியின் கீழ், நான் அறிவித்தவை எதுவும் நிறைவேற்றப் படவில்லை என, தி.மு.க.,வினர் பொய் பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டசபையில், 110வது விதியின் கீழ், பல அறிக்கைகளை அளித்துள்ளேன். அவற்றில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எடுத்துக் கூறியுள்ளேன். சட்டசபையில் அறிவித்த திட்டங்களில் சில திட்டங்கள்,

உடனடியாக செயல்படுத்தக் கூடியவை. கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் கட்டுவது போன்ற அறிவிப்புகள், ஒன்றிரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றக் கூடியவை. சில்லஹல்லா புனல் மின் திட்டம் போன்ற பெரும் திட்டங்கள், சில ஆண்டுகளில் முடிக்கக்கூடியவை.

சட்டசபையில், 110வது விதிகளின் கீழ் அறிவித்தவை அனைத்தும் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த லோக்சபா தேர்தலின் போதே இந்த அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற பொய் பிரசாரத்தை, தி.மு.க.,வினர் மேற்கொண்டனர்.


அப்போதைய தேர்தல் பிரசார கூட்டங்களில், சில உதாரணங்களை சுட்டிக்காட்டி, அதற்கு பதிலளித்தேன். எனினும், பொய் பிரசாரம் ஒன்றையேதங்களது பிரசார ஆயுதமாக நம்பியுள்ள தி.மு.க.,வினர், தற்போதும், 110வது விதியின் கீழ் செய்த அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை என, திரும்பத் திரும்ப பொய் பேசி வருகின்றனர்.எனவே, ஆண்டுதோறும் துறைதோறும் செய்த அறிவிப்புகள் எவ்வாறு

நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது குறித்து, துறை வாரியான விளக்கங்களை தொடர்ந்து அளிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ள ஜெயலலிதா, பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் முடிக்கப்பட்ட திட்டங்கள், பணிகள் நடந்து கொண்டிருக்கும் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016