கவித.. கவித....

Tamilnadu Assembly Election News: கவித.. கவித....

'நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா... நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...' என்ற உணர்ச்சி பொங்கும் பாடலை இன்றைய அரசியலில் ஊழல் புரிவோரை மையமாக வைத்து

மாற்றி அமைக்கப்பட்டது.

லஞ்சம் உண்டுலாபம் உண்டு ஓடு ராஜா...

சிறை கம்பி உன்னை தேடி வரும்

பாரு ராஜா...

வாங்கி வாங்கி வாழ்ந்தது

போதும் ராஜா...

வட்டிக்கு விட்டும் பிழைக்கலாம்

ஓடு ராஜா... (லஞ்சம் உண்டு...)

ஊழல் செய்யும் உனக்கு

ஒட்டு துணி எதற்கு

தினம் வாங்கி பழக்கப்பட்ட பின்

வேட்டி எதற்கு?

ஊழலில் திளைத்த பின்பு

பயம் எதற்கு?

நீ கொண்டு வந்ததென்னடா

ஊழல் சரக்கு... (லஞ்சம் உண்டு...)

அண்ணாந்து பார்க்கிற

நட்சத்திர ஓட்டல் கட்டி

அதன் அருகினில்

டாஸ்மாக் பார்கள் கட்டி

சொர்க்கம் இதுவென்று

பெயரும் வைத்தால்

அந்த சாமி சிலிர்க்கும்

இந்த ஊரே மிதக்கும் (லஞ்சம் உண்டு...)

ஊழல் இல்லை என்று

சொல்லி ஊளை இடு

இந்தியாவில் லஞ்சம் இல்லா

பூமியேது கவலைவிடு

சிறை கம்பி எண்ண

தோளை நிமிர்த்து

நம்மூரு தலைவரெல்லாம்

தேடி வருவார் மாலை தொடுத்து

(லஞ்சம் உண்டு...)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016