சுயேட்சைகள் கூட வரலையே:காத்திருந்த தேர்தல் அலுவலர்கள்

Tamilnadu Assembly Election News:  சுயேட்சைகள் கூட வரலையே:காத்திருந்த தேர்தல் அலுவலர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர்கள் கூட மனுதாக்கல் செய்ய வராததால், காத்திருந்த தேர்தல் அலுவலர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் தனி சட்டசபைதொகுதியில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்களை பெற, தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்கள் காத்திருந்தனர்.


இதற்காக ஸ்ரீவி.டி.எஸ்.பி., வேணுகோபால் தலைமையில் 30க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேட்பாளர்கள் நலன்கருதி ஷாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.

தொகுதி தேர்தல் அலுவலர் சங்கரநாராயணன், தாசில்தார் கண்ணன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள், வீடியோகிராபர் ஆகியோர் காலை 10 மணி முதல் தயாராக காத்திருந்தனர். தாலுகா அலுவலகம் வழியாக வந்த வாகனங்களை போலீசார் ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தனர். வழிமேல், விழி வைத்து அனைவரும் காத்திருந்த நிலையில், ஏற்கனவே விண்ணப்பங்களை வாங்கி சென்ற சுயேட்சை வேட்பாளர்கள் கூட வேட்புமனு தாக்கல் செய்யவரவில்லை.

இத்தொகுதியில் போட்டியிட 12பேர் வேட்புமனு விண்ணபங்களை வாங்கி சென்றனர் என்பது குறிபிடதக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016