பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியீடு

Tamilnadu Assembly Election News:  பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை:தமிழக பா.ஜ., வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள்:
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு
* விவசாயத்திற்கு தனி பட்ஜெட். கரும்பில் இருந்து, எத்தனால் எடுக்க தடைகள் விலக்கப்படும்
* நீர்நிலைகள், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும். உள்ளூர் நதிகள் இணைக்கப்படும்; மாநில நீர்வழி போக்குவரத்து உண்டாக்கப்படும்
* அரசே மணல் வினியோகம் செய்யும்; தாது மணல் கொள்ளைகள் தடுக்கப்படும்
* எளிமையான, வெளிப்படையான தொழில் கொள்கை உருவாக்கப்படும். தென் மாவட்டங்களில், தொழில் துவங்க வரிச் சலுகைகள் தரப்படும்
* மின் துறையை சீரமைக்க, மத்திய அரசின், 'உதய் திட்டம்' அமலாக்கப்படும்; 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்
* 'லோக் ஆயுக்தா' கொண்டு வரப்படும். அரசு பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு நிகரான கல்வி கற்பிக்கப்படும்
*அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்
* ஆன்மிக சுற்றுலா திட்டம் உருவாக்கப்படும்; கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்
* ஸ்மாட் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
* வெளிநாடு வாழ் தமிழர்களின் தொடர்பை ஏற்படுத்த தனி அமைப்பு உருவாக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016