கருத்து கணிப்பு குறித்து சீமான் கருத்து

Tamilnadu Assembly Election News: கருத்து கணிப்பு குறித்து சீமான் கருத்து

வேலூர்: கருத்து கணிப்புக்கள் கருத்து திணிப்பாக உள்ளது என, வேலூரில் சீமான் கூறினார்.


நாம் தமிழர் கட்சியின், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், வேலூரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., வேட்பாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தால், அவர்கள் எப்படி பிரசாரத்தில் ஈடுபடுவர். நாளை நாம் வேட்பாளராக இருக்கிறோமா இல்லையா என்ற மனநிலையில் தான் அவர்கள் இருக்கின்றனர். தேர்தல் கமிஷன் பணம் உள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கருணாநிதி குறித்து வைகோ விமர்சித்திருப்பது தவறு. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வேண்டிய பத்திரிகைகளில், தங்களுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புக்களை வெளியிடுகிறது. அது கருத்து கணிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016