'இரட்டை இலைக்கு' ஓட்டு கேட்ட சீமான்

Tamilnadu Assembly Election News: 'இரட்டை இலைக்கு' ஓட்டு கேட்ட சீமான்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஓட்டு கேட்டதால், கட்சி வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார்.


நாம் தமிழர் கட்சி, தமிழக்தில் உள்ள, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வை கடுமையாக சாடி வரும் சீமான், இரண்டு கட்சிகளையும் தேர்தலில் தோல்வியடைய செய்து, நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என, பேசி வருகிறார். இந்நிலையில், ஊத்தங்கரை சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து, ஊத்தங்கரை ரவுண்டனாவில் நடந்த, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று சீமான் பேசினார். அப்போது பேச்சு முடிந்தவுடன், 'வரும் தேர்தலில், கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டளிக்க வேண்டும்' என்றார். இதை கேட்ட வேட்பாளர் மட்டுமன்றி, கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சுதாரித்து கொண்ட சீமான், இரட்டை மெழுகுவர்த்திக்கு ஓட்டளிக்கும் படி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016