மதுவிலக்கு குறித்து பேசாதது ஏன்? ஜெ.,வுக்கு சீமான் கேள்வி

Tamilnadu Assembly Election News: மதுவிலக்கு குறித்து பேசாதது ஏன்? ஜெ.,வுக்கு சீமான் கேள்வி

மேச்சேரி: 'ஜெயலலிதா கடந்த, ஐந்து ஆண்டுகளில் சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் மதுவிலக்கு குறித்து பேசாமல், இப்போது பேசுவது ஏன்?.' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.


சேலம் மாவட்டம், மேச்சேரியில் மேட்டூர் சட்டசபை தொகுதி நா.த.க., வேட்பாளர் வெங்கடாசலத்தை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: கடந்த, ஐந்து ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சிதான் நடந்தது. அப்போது மதுவிலக்கு கோரி தமிழகத்தில் ஏராளமான போராட்டங்கள் நடந்தது. அப்போது மதுவிலக்கு குறித்து சட்டசபையிலோ, மக்கள் மன்றத்திலோ முதல்வர் ஜெயலலிதா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிகாரம் கையில் இருந்ததே அதற்கு காரணம். மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவும், ஓட்டு வாங்கவும் தேர்தல் பிரசாரத்தில் முதன்முறையாக மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என கூறியுள்ளார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஊழல் கட்சிகளாக அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் மாற்று நாம் தமிழர் கட்சி மட்டுமே. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016