தே.மு.தி.க.,வுக்கு ஓட்டா? சீமான் காட்டம்

Tamilnadu Assembly Election News: தே.மு.தி.க.,வுக்கு ஓட்டா? சீமான் காட்டம்


கோவை : கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில், 'நாம் தமிழர்' கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. வேட்பாளர் பெஞ்சமின் பிராங்கிளினுக்கு ஓட்டு சேகரித்து சீமான் பேசுகையில், ''நாங்கள் இந்த தேர்தலை, தேர்வு எழுதுவதாக கருதுகிறோம். மானமும், வீரமும் தமிழினம் என, தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்வு முடிவுகள், இதை தெரியப்படுத்தும். சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல்.

காமராஜ் போன்ற தலைவர்கள் வகித்த பதவிகளை வகிக்க வேண்டும் என, விஜயகாந்த் நினைக்கிறார். அவரது தே.மு.தி.க.,வுக்கு ஓட்டுப் போடுவதற்கு பதில், தீக்குளித்து சாகலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016