மணல் கடத்தலுக்கு அரசு பாதுகாப்பு சீமான் குற்றச்சாட்டு

Tamilnadu Assembly Election News:  மணல் கடத்தலுக்கு அரசு பாதுகாப்பு சீமான் குற்றச்சாட்டு

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் பேசியதாவது: என்னை பெயர் சொல்லியும், உறவுமுறை கூறியும் எப்போதும் மக்கள் அழைக்கலாம், ஆனால் ஜெ., வையோ, கலைஞரையோ பெயர் சொல்லி அழைக்க முடியாது. அண்டை மாநிலங்களில் மணல் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மணல் கடத்தல் ஜரூராக நடக்கிறது. கடத்தல்காரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசு, எதிர்ப்பவர்களை சிறையில் அடைக்கிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் விவசாயம் அரசு துறையாக்கபடும், விவசாயிகள் அனைவரும் அரசு பணியாளர்களாக்கபடுவர், என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016