வாசகர் கடிதம்

Tamilnadu Assembly Election News:  வாசகர் கடிதம்

வி.பொன்ராஜ் பேட்டி படித்தேன். ஆள் பலமும் பண பலமும் உள்ளவரே வேட்பாளராக முடியும் என்ற நிலை இருக்க, மக்களைப் புரிந்தவரே வேட்பாளராக முடியும் என்ற முதல் நோக்கமே அவர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை காட்டுகிறது. அதிலும் மதுவிலக்கு
அமல் உடனடி சாத்தியமில்லாததுஎன்பதையும், எப்படி அமல் படுத்தினால் மது விலக்கு வெற்றி பெறும் என்பதையும் விளக்கிய விதம் அருமை.
எஸ்.எஸ்.வள்ளுவன்வேம்பார், துாத்துக்குடி.


தேர்தல் புயல் நெருங்க, நெருங்க, பெரிய கட்சி முதல் சிறிய கட்சிகள் வரை, கொள்கை கோமணங்கள் கழன்று நிர்வாணமாய் நின்று முகம் சுளிக்க வைக்கின்றன. முதல் முறையாக ஓட்டளிக்க இருக்கும் நான், கடந்த ஆறு மாத அரசியல் நிகழ்வுகளை கண்டு மிகவும் வெறுப்பு அடைந்துள்ளேன். இவர்களில் பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டும் தான், கூட்டணிக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. இவர்களால் இந்த தேர்தலில் மாற்றம் நிகழாவிடிலும் நிச்சயம் அடுத்த தேர்தலில் நிகழும். வருங்கால தலைவர்கள் சீமானுக்கும் அன்புமணிக்கும் வாழ்த்துகள்.
சு.கார்த்திக் குமார்சாத்துார்.


இப்போது பலர், எனக்கு எந்த கட்சியையும் பிடிக்கவில்லை. எனவே, நான் ஓட்டு போட போவதில்லை (அ) நோட்டாவிற்கு ஓட்டளிக்கப் போகிறேன் என்கின்றனர். அது வீண் என்பது என் கருத்து. இருக்கும் வேட்பாளர்களில் யார் அதிக தகுதியுடையவ ராக இருக்கிறார் என்று பார்த்து ஓட்டளிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.வி.ஜி. ஜெயஸ்ரீபழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016