செய்தியும்: செப்பு மொழியும்

Tamilnadu Assembly Election News:  செய்தியும்: செப்பு மொழியும்

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, இரண்டே நிலைப்பாடு தான். ஒன்று ஆளுங்கட்சி; அடுத்தது அதன் எதிர்க்கட்சி. இந்த நிலைப்பாட்டிற்கு ஏற்ப தான், அவரவர் தொலைக்காட்சிகளில் செய்திகள் வடிவம் பெறுகின்றன. ஒரே செய்தியை, எப்படி அவர்களுக்குச் சாதகமாக வாசிக்கின்றனர் என்பது தெரியாமல், மக்கள் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக இதோ ஒரு ஒப்பீடு.


ஆளுங்கட்சி:

கட்சிப் பொறுப்பிலிருந்து அமைச்சர் விடுவிப்பு

மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

துக்கத்தால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்

தாமாக முன்வந்து வேலைநிறுத்தம் செய்தனர்

பால் கொள்முதல் விலை உயர்ந்தது; விவசாயிகள் மகிழ்ச்சி

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஜாமின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது

எதிர்க்கட்சியினர் சூழ்ச்சியில் ஈடுபட்டனர்


சாலை மறியல் செய்தவர்களைக் காவல்துறை அப்புறப்படுத்தியது

வழக்கம் போல பேருந்துகள் இயங்கின

நகரெங்கும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டது

சாலையோர ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றம்


விழாவில் நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்


மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை


மூன்றாண்டு சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்புஎதிர்க்கட்சி:அமைச்சரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

மின் கட்டணம் உயர்த்தப்பட்டது

கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்

கலவரத்தால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர் -

வேலைநிறுத்தம் செய்ய கட்டாயப்படுத்தினர் -

பால் விலை உயர்ந்தது; மக்கள் அவதி -

பெட்ரோல் விலை அதிகரிப்பு -

ஜாமின் வழங்க மறுப்பு கோரிய மனு தள்ளுபடி

ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் -

மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்-

பல பகுதிகளில் பேருந்துகள் இயங்கவில்லை -

நகரெங்கும் விளம்பரத் தட்டிகள் வைத்து இடையூறு

ஏழை மக்கள் விரட்டியடிப்பு

நலத்திட்ட விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார்.

'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர், அவசரப் பிரிவில் சேர்ப்பு

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016