கருணாநிதியின் 'சிலேடை' ரசிக்கத்தக்கதா?

Tamilnadu Assembly Election News:  கருணாநிதியின் 'சிலேடை' ரசிக்கத்தக்கதா?

'பழம் நழுவி பாலில் விழும்' என்ற கருணாநிதியின், சமீபத்திய சிலேடை வரவேற்பையும், விமர்சனங்களையும் உருவாக்கியது. ஆனால், தனிமனித தாக்குதல் அதிகம் இருக்கும் இன்றயை அரசியல் சூழலில், விமர்சனங்களை கூட, நயமாக சொல்லும் கருணாநிதியின் அணுகுமுறை அவசியம் என்கிறது ஒரு தரப்பு. மற்றொரு தரப்போ, அவர் பேச்சுக்கும், செயலுக்கும் தொடர்பில்லை. சிலேடையாக பேசுவதால் மட்டும் நாகரிகம் வந்துவிடாது என்கிறது. இதுபற்றிய நேர் எதிர் கருத்துக்கள்:


நிர்மலா பெரியசாமி பேச்சாளர், அ.தி.மு.க.,பேசி, பேசி தமிழக மக்களை ஏமாற்றியவர், தி.மு.க., தலைவர் கருணாநிதி. ஒரு பிரச்னையில் நாகரிகமாக பதில் சொல்கிறேன் என்ற போர்வையில், அநாகரிகத்தை விதைப்பவர் அவர். எம்.ஜி.ஆர்., பற்றியும், ஜெயலலிதா பற்றியும், அவர் எந்த நாகரிகத்தில் விமர்சித்தார் என்பதை, தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.உதட்டில் சிரிப்பும், உள்ளத்தில் நஞ்சும் தாங்கி இருப்பவை, அவரது சிலேடைகள். தன் குடும்பம் என்று வரும்போது, 'கண்கள் பனித்தது, நெஞ்சம் இனித்தது' என்பார். தன் குடும்பம் சாராத பிரச்னை என்றால், 'கூடா நட்பு, கேடாக விளைந்தது' என்பார்.


எதிர்க்கட்சியினரை, மிக அநாகரிகமாக கருணாநிதி சொன்னது, எழுதியது எல்லாம் ஏராளம். பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும், மதம், கடவுள் குறித்து கருணாநிதி சொன்ன கருத்துக்கள், மக்கள் மனதை புண்படுத்தி உள்ளது. அவற்றை

எந்த நாகரிகத்தின் அடிப்படை யில் அவர் சொன்னார்.இவருக்கு ஏற்றது போல் தான், எந்த கட்டுப்பாடும் இன்றி பேசும் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் உள்ளார். ஜெயலலிதா - மோடி சந்திப்பு பற்றி, அவர் சொன்ன கருத்துக்களை,

நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக கூறும் கருணாநிதி, கண்டித்து இருக்க வேண்டாமா?

அதையெல்லாம் ரசித்து, வேடிக்கை பார்த்தவரின் சிலேடைகள் ரசனைக்குஉரியவை என்றால், அதைவிட அநாகரிகம் வேறு இல்லை.


கவிஞர் சல்மா தி.மு.க.,:தற்போதைய அரசியல் தனிமனித தாக்குதல் களமாக மாறிவிட்டது. விமர்சனங்கள் என்ற பெயரில், 'நா கூசும்' வார்த்தைகளை, பல தலைவர்கள் பயன்படுத்துகின்றனர். எதிர்ப்பை எந்த அளவுக்கு அநாகரிகமாக சொல்ல முடியுமோ? அப்படி எல்லாம்

சொல்கின்றனர்.


இப்படிப்பட்ட தலைவர்கள் மத்தியில், அடிப்படையில் ஒரு எழுத்தாளர், கவிஞர் என்ற நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் விமர்சனங்கள், நாகரிகமாக, ரசிக்கத்தக்க வகையில் உள்ளது. ஒரு பிரச்னை குறித்து, எல்லா தலைவர்களும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், கருணாநிதி தெரிவிக்கும் கருத்துக்கு, ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

விமர்சனங்களைக் கூட நாகரிகமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லும் தன்மை அவருக்கு மட்டுமே கைகூடி வருகிறது. அவர் பயன்படுத்தும் சிலேடைகள் நயமாக இருக்கும். பிரச்னைக்கு அவர் சொல்ல வரும் கருத்தைத் தாண்டி, அவரது சொல்லாட்சி ரசிக்கத்தக்கதாக இருக்கும்.


கருணாநிதியைப் போல, பிற அரசியல்வாதிகளும், நாகரிகமாகவும், நயமாகவும் கருத்துக்களை பகிர முற்பட்டால், பல அறிக்கை போர்களும், வார்த்தை போர்களும் நிற்பதோடு, தனி மனித தாக்குதல் அரசியலில் குறையும். இந்த அணுகுமுறை வருங்கால இளைஞர்களுக்கு வழி காட்டுதலாகவும் இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016