விஜயகாந்த் அதிரடி முடிவால் புது கூட்டணி உருவாக வாய்ப்பு

Tamilnadu Assembly Election News: விஜயகாந்த் அதிரடி முடிவால் புது கூட்டணி உருவாக வாய்ப்பு

'சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளதால் அக்கட்சி தலைமையில் புதுக் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அதேநேரத்தில் விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த தி.மு.க., மற்றும் மக்கள் நலக் கூட்டணியினரும் மாற்று வழிகள் குறித்து யோசிக்கத் துவங்கி உள்ளனர்.

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., - -பா.ஜ., - -மக்கள் நலக் கூட்டணி தரப்பில் தீவிரமாக முயற்சிக்கப்பட்டது. ஆனால் 'தே.மு.தி.க., 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்' என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

ஒருமித்த கருத்து... :அதேநேரத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளை தே.மு.தி.க., தலைமையிலான அணியில் இணைக்கப் போவதாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளதால் பெரிய கட்சிகள் அமைக்கும் கூட்டணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் சிறிய கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க., தலைமையிலான அணியில் இணைய விஜயகாந்தை தேடி வரும் சூழல் உருவாகி உள்ளது. அதற்கேற்ற வகையில் பல சிறிய
கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் தே.மு.தி.க.,வும் களம் இறங்கியுள்ளது. அத்துடன் விஜயகாந்த்த லைமையை ஏற்றால் அவரை முதல்வர் வேட்பாளராக்க முன்வந்தால் மக்கள் நலக் கூட்டணியை தங்கள் பக்கம் நகர்த்தி வரவும் தே.மு.தி.க.,வினர் முற்பட்டுள்ளனர். மேலும் புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகளை அணியில் சேர்க்கவும் ரகசிய பேச்சு துவங்கி உள்ளது.இது ஒருபுறமிருக்க தனித்து போட்டி என அறிவித்துள்ள விஜயகாந்தை சில புதிய திட்டங்களுடன் சந்திக்க மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்தகட்டமாக...:இந்தச் சந்திப்பு அனேகமாக இன்று நடக்கலாம். இந்தச் சந்திப்பின் போது விஜயகாந்த்
தலைமையை ஏற்க மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சம்மதித்தால்அடுத்த கட்டமாக த.மா.கா.,வையும் அணியில் சேர்க்கும் படலம் ஆரம்பமாகும். இப்படி ஒரு 'மெகா' கூட்டணி அமைந்தால் அந்த அணிக்கு, மதச்சார்பற்ற அணி என பெயர் சூட்டவும் சில தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்கிடையில் தங்களின் கூட்டணி அழைப்பை தே.மு.தி.க., நிராகரித்ததால் கடும் விரக்தியில் உள்ள தி.மு.க.,வினர் மாற்று வழியை யோசிக்கத் துவங்கி உள்ளனர்.

யோசனை:அதாவது கூட்டணியில் இருந்தபடியே அதிருப்தியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சியை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வருவதோடு தனித்து போட்டி என களமிறங்கி இருக்கும், பா.ம.க.,வை அழைத்து வரலாமா என்ற யோசனையிலும் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் தங்கள் கூட்டணியில் இருப்பதால் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள சில கட்சிகளை இழுத்து விஜயகாந்துக்காக ஒதுக்கி வைத்திருந்த தொகுதிகளை அவர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் திட்டம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இதனால் அடுத்த சில நாட்களில் அரசியல் அரங்கில் பல மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016