'பேரம்' என்பது கொச்சையான வார்த்தையா?

Tamilnadu Assembly Election News: 'பேரம்' என்பது கொச்சையான வார்த்தையா?

சட்டசபை தேர்தல் களத்தில், 'பேரம்' என்ற வார்த்தை மிக சாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தை ஆகிவிட்டது.

இரு அரசியல் கட்சிகள் இடையே ஏற்படும் தேர்தல் உடன்படிக்கை தொடர்பாக பயன்படுத்தப் படும் இந்த வார்த்தை அரசியலையும்,அரசியல்வாதிகளையும் கொச்சைப்படுத்தும் வார்த்தை என கண்டிக்கின்றனர் ஒரு சாரார். மற்றொரு தரப்போ, 'கொள்கைகளை விற்றுவிட்டு, தேர்தல் ஆதாயத்துக்கு அரசியல் கட்சிகள் இணைய, 'பேரம்' தான் நடக்கிறது' என்கிறது. இதுபற்றிய நேர் எதிர்க் கருத்துக்கள்:

கூட்டணி என்பது கொள்கை அடிப்படையிலானது என, ஒரு காலத்தில் இருந்தது. இரு கட்சிகள் கொள்கை வேறுபாடு கொண்டவை, இவை இரண்டும், கூட்டணி சேர முடியாது என்பதை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருந்த வாக்காளர்கள் தெரிந்தே வைத்திருந்தனர்.


அதேபோல், கோடீஸ்வரர்களை எதிர்த்து, சாதாரணப்பட்டவர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக, திண்டிவனம் தொகுதியில் கோயங்காவை எதிர்த்து முனுசாமி வென்றார்.

மக்களோடு இருப்பவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணமும், மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், 1967ல், தமிழகத்தில் அமைந்த முரண்பட்ட கூட்டணி, இந்த சிந்தனைகளுக்கு, 'ஆப்பு' வைத்தது. முஸ்லீம் லீக் - பார்வர்டு பிளாக் - தி.மு.க., - கம்யூனிஸ்ட்கள் - ராஜாஜி ஆகியோர் இணைந்து அமைத்த இக்கூட்டணி, வெற்றியும் பெற்றது. இதனால்,தேர்தலுக்காக எதையும் செய்யலாம். வெற்றி மட்டுமே இலக்கு என்ற நோக்கம், நாடு முழுவதும் பரவியது.

இந்த கோட்பாடு, இன்று பேரத்தில் சென்று நிற்கிறது. கூட்டணி அமைக்க கட்சி

களிடையே, பல வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு ஏற்கவும் படுகிறது. பணம் செலவிட்டு ஆட்சியைப் பிடிப்போம். ஆட்சிக்கு வந்ததும், அனைத்தையும் பணம் பண்ணுவோம். இந்த பணத்தை கொண்டு, மீண்டும் தேர்தலை சந்திப்போம். இதுவே, பேரத்தின் முழுப்பொருள்.

திருச்சி வேலுசாமிபேச்சாளர், தமிழக காங்கிரஸ்:


'பேரம்' என்ற சொல் வியாபாரத்தில் பயன்படுத்தும் சொல். இதை, அரசியலில் புகுத்தியது ஊடகங்கள் தான். அரசியல் ரீதியாக, இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே தெரியவில்லை. தனக்கு பிடிக்காத கட்சி மற்றும் கூட்டணியை விமர்சிக்க, ஊடகங்கள், 'பேரம்' என்ற வார்த்தையைபயன்படுத்துகின்றன.

இரு கட்சிகளிடையே, கூட்டணி உருவாக பேரம் நடக்கிறது என கூறுகின்றனர். இதன் மூலம், அரசியலையும், அரசியல்வாதிகளையும் கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர்.இரு கட்சிகள், கூட்டணி அமைக்கின்றன என்றால், அவற்றுக்கு

இடையே எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்தெந்த தொகுதிகளை கேட்பது என்ற, ஒரு பேச்சு நடக்கும்.

ஒவ்வொரு கட்சியும், தனக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் மற்றும் தன் கட்சி சார்ந்த தலைவர்களை, நிர்வாகிகளை போட்டியிட செய்ய திட்டமிடுவார்கள். அதற்கான தொகுதிகளை, வாதிட்டும் பெறுவர்.

கூட்டணி அமைக்கும்போது, சில மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து, அதை நிறைவேற்ற வேண்டும் என்ற வாக்குறுதிகளைப் பெறுவர். இதுதான் கூட்டணி அமைக்கும் கட்சிகளிடையே நடக்கும்.

ஆனால், விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில், 'பேரம் நடக்கிறது. பேரம் படிய வில்லை, பேரம் முடிந்தது' என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். ஜனநாயகத்தை அசிங்கப்படுத்தும் இச்செயல் கண்டிக்கத்தக்கது.

- தாமரைசெல்வன் முன்னாள் எம்.பி., - தி.மு.க.,


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016