ஓட்டுக்கு துட்டு: தடுக்க முடியுமா?

Tamilnadu Assembly Election News:  ஓட்டுக்கு துட்டு: தடுக்க முடியுமா?

தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்ற பேச்சை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுக்கின்றனர் என்ற பேச்சே அதிகமாக உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது.இதை தீவிரப்படுத்தினால் போதும், பணம் கொடுப்பதை தடுத்து விடலாம் என்கிறது ஒரு தரப்பு. சட்டமும், அதிகாரமும் இருந்தும்,

அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். இதனால், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவே முடியாது என்கிறது மற்றொரு தரப்பு. இதுபற்றிய நேர் எதிர் கருத்துக்கள்:


தேவசகாயம் ஐ.ஏ.எஸ்., (ஓய்வு)நிறுவனர், கண்ணியமான தேர்தல் கூட்டமைப்பு

ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக, பணத்தை பதுக்கி வைத்து விட்டனர். இனிமேல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை, தடுக்க முடியாது என, பரவலாகப் பேசுவது தவறு. பணத்தை இப்போது பதுக்கி இருக்கலாம். இன்னும், வாக்காளர்களுக்கு போகவில்லை. அதற்கு இன்னும் நாள் இருக்கிறது. தேர்தல் ஆணையம் இப்போது செய்ய வேண்டியது, பதுக்கிய பணத்தை பிடிக்க வேண்டும். தேர்தல் பணியில், வருமான வரித்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களைக் கொண்டு, வருமானவரி புலனாய்வு துறை உதவியுடன், பதுக்கி வைத்த பணத்தை எடுக்க முடியும்.


அதை துரிதமாக செய்ய வேண்டும். ஒரு இடத்தில் பதுக்கிய பணத்தை எடுத்துவிட்டால் போதும், மிகப் பெரிய தாக்கத்தை அது உருவாக்கும்.இதன்மூலம், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதோடு, பதுக்கிய பணத்தை கணக்கு காட்டாமல் இருந்ததற்கு அபராதம் விதிப்பதோடு, சிறை தண்டனையும் அளிக்க முடியும்.

பொதுவாக பணம் கொடுப்பதை தடுப்பதற்காக, பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கையும், களவுமாக பிடித்து நடவடிக்கை எடுப்பதைவிட, மனரீதியாக ஒரு அச்சத்தை உருவாக்க வேண்டும். எனவே, பணம் கொடுப்பதை தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.


சிவஇளங்கோ,தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்:கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஓட்டுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த, 54 கோடி ரூபாயை, தேர்தல் ஆணையம் கைப்பற்றியது. இந்த தொகையை வைத்திருந்தவர்கள் மீது, இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, தெரியவில்லை. குறைந்தபட்சம், யார் வைத்திருந்தனர் என்ற தகவல்கூட வெளியிடப்படவில்லை.


ஓட்டுக்கு கையூட்டு கொடுக்க முயன்றவர்கள் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, தொடர்புடைய கட்சியின் அங்கீகாரம் ரத்து, சின்னம் முடக்கம், வேட்பாளர் தகுதி நீக்கம் போன்றவற்றை செய்திருந்தால், பணம் கொடுக்க நினைப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும். ஆனால், எதையுமே, ஐந்து ஆண்டுகளாகியும் செய்யாத நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எப்படி அச்சம் வரும்? வருவாய், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களும், அதிகாரிகளுமே, அதிகளவில் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.


இவர்கள், அரசியல் கட்சிகளுக்கு அடங்கி நடப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களால், தைரியமான நடவடிக்கை எடுக்க முடியாது. நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ள, முக்கிய தேர்தல் பணியில், வெளிமாநிலம் மற்றும் மத்திய அரசு ஊழியர்களை நியமிக்காத வரை, 'ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற அத்துமீறல்களை தடுப்போம்' என்பது வெறும் பேச்சில் மட்டுமே இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016