பிரசாரத்தில் தனி மனித தாக்குதல் அவசியமா?

Tamilnadu Assembly Election News:  பிரசாரத்தில் தனி மனித தாக்குதல் அவசியமா?

தேர்தல் பிரசாரத்தின் போது, அரசியல் கட்சிகளின் பேச்சாளர்கள், மிகக் கடுமையாக தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், பிரசாரம் திசைமாறுவதோடு, தேவையற்ற மோதல்களும் உருவாகின்றன. எனவே, இப்பேச்சுகளை தவிர்க்க, தேர்தல்

கமிஷன் நடத்தை விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால், ஒரு தரப்பு, 'இது வழக்கமான ஒன்று' என்கிறது. எதிர் கருத்தும் உள்ளது. இது பற்றிய நேர் எதிர் கருத்துகள்:


ஒரு நாடகம் நடக்கிறது என்றால், கதாநாயகன், கதாநாயகி, துணை பாத்திரங்கள் மற்றும் கோமாளியும் இருப்பார். இதில், கோமாளியின் நடிப்பும் விரும்பத்தக்கதே. அதேபோல, தேர்தல் பிரசாரத்தில் கொள்கை, கோட்பாடுகள், வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் தலைவர்களும், விமர்சனங்களை முன்வைக்கும் பேச்சாளர்களும் இருப்பர்.மேடை பேச்சின் போது, ஒருவரை

வர்ணிப்பது இயல்பு தான். இதைத் தவிர்க்க முடியாது. வர்ணணை என்பது, மக்களால் ரசிக்கப்படுகிறது. இப்படி வர்ணித்துப் பேசுவோருக்கு வரவேற்பும் உள்ளது. மற்ற பேச்சாளர்களை விட, வர்ணித்து பேசும் பேச்சாளர்களுக்கான ஊதியமும் அதிகம்.மேடைப் பேச்சின் போது,

வர்ணித்துப் பேசுவதை ரசித்துவிட்டு சென்று விடுவர். அதற்கு முக்கியத்துவம் ஒன்றும் கிடையாது. இப்படிப் பேசுவோர் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்றனர். இதை இலக்கியம் என்று பார்க்க வேண்டும். அதைவிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது


சரியானது அல்ல.

வர்ணனையும் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். அது, கீழ்த்தரமாகப் போகும்போது, சம்பந்தப்பட்ட தனி மனிதர்கள் வழக்கும் தொடர்ந்து உள்ளனர். இந்நிலையில், தேர்தல் கமிஷனின் அறிவிப்பை, கடுமையாக்க வேண்டிய அவசியமில்லை.சமரசம், முன்னாள் எம்.எல்.ஏ.,

தலைமை கழக பேச்சாளர், அ.தி.மு.க.,


தேசிய கட்சிகளால் உருவாக்கப்பட்ட தனிமனித தாக்குதலுக்கு, சில நேரங்களில், தி.மு.க., பதிலடி கொடுத்திருக்கலாம். 'நீ என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என எதிரி தீர்மானிக்கிறான்' என்பது போல, அது அமைந்திருக்கலாம். பொதுவாக தேர்தலில், எதை முன்னிறுத்த வேண்டும், மக்கள் மத்தியில் எதை கொண்டு செல்ல வேண்டும் என்கிற போது, ஒரு அரசின் செயல்படாத தன்மை, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் போன்றவையே முக்கியம். மேலும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதை செய்வோம். இதற்கு முன், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இவற்றை செய்துள்ளோம்' என கூறி, வாக்காளர்களை நாடுவது தான் இயல்பு.


ஆனால், ஒரு தலைவரின் வயோதிகம்; அவரது குடும்பம் என, தனிப்பட்ட தாக்குதல்களில், அ.தி.மு.க.,வினர் ஈடுபடுகின்றனர். எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு, பதில் சொல்ல, வலுவான ஆதாரங்கள் இல்லாதபோது, இதுபோன்ற தனிமனித தாக்குதலை தொடுக்கின்றனர். இதை, மக்கள் புரிந்து கொண்டு தான் உள்ளனர்.


எனவே, தேர்தல் பிரசாரத்தில் தனி மனித தாக்குதலை செய்யக்கூடாது என கூறி உள்ளது வரவேற்கத்தக்கது. அறிவிப்போடு, இதை நிறுத்திவிடாமல், நடவடிக்கை எடுப்பதையும் தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும்.புகழேந்தி, பேச்சாளர் மாணவர் அணி செயலர், தி.மு.க.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016