'வாட்ஸ் ஆப்' குழுக்களுக்கு கட்சிகள் வலைவிரிப்பு

Tamilnadu Assembly Election News: 'வாட்ஸ் ஆப்' குழுக்களுக்கு கட்சிகள் வலைவிரிப்பு

ஒரே கல்லில், நிறைய மாங்காய் அடிக்கும் வகையில், 'வாட்ஸ் ஆப்' குழுக்களுக்கு, அனைத்து கட்சிகளும் வலை வீச துவங்கியுள்ளன. தமிழகத்தில், கட்சி களின் கூட்டணி பேரம், விரைவில் முடிய உள்ளது. இன்னும், 10 நாட்களில் பிரசாரம் களை கட்டத் துவங்கி விடும். புதிய வாக்காளர் கள் மற்றும் நடுநிலையாளர்களை குறிவைத்து, சமூக வலைதளங்களில் வாக்காளர்களை கவர, கட்சியினர் காய் நகர்த்த துவங்கி உள்ளனர்.


கல்லுாரி மாணவர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மூலம், அதிக நபர்களை வைத்துள்ள, 'வாட்ஸ் ஆப்' குழுக்களுக்கு, கட்சிகள் வலை வீசி உள்ளன.

இருந்த இடத்திலிருந்தே ஒரே, 'கிளிக்'கில், 250 பேருக்கு நேரடியாக சென்றடையும், 'வாட்ஸ் ஆப்' பிரசாரத்திற்கு அனைத்து கட்சிகளும் தனி வியூகம் அமைத்து வருகின்றன. பிரசார வீடியோ மற்றும் ஆடியோ பரப்புவதை அ.தி.மு.க.,வினர் துவக்கி விட்டனர். தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வும், அதற்கென தனி நிதி ஒதுக்கியுள்ளது. மக்கள் நலக் கூட்டணி யும், இணையதள பிரசாரத்தை இன்று முதல் கையில் எடுக்கிறது.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016