கூட்டணியில் பா.ஜ.,வுக்கு இடமில்லை:தெளிவுபடுத்தியது அ.தி.மு.க.,

Tamilnadu Assembly Election News:  கூட்டணியில் பா.ஜ.,வுக்கு இடமில்லை:தெளிவுபடுத்தியது அ.தி.மு.க.,

அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இணைய வாய்ப்பிலை என்பதை தெளிவுபடுத்த, கட்சி நிகழ்ச்சிகளில், சிறுபான்மை சமூகத்தினருக்கு, அ.தி.மு.க., தலைமைமுக்கியத்துவம் அளித்து வருகிறது.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சி செய்தது. ஆனால், பா.ஜ., கூட்டணியில் இணைந்தால், சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை இழக்க நேரிடும் என, அ.தி.மு.க., கருதியது.எனவே, பா.ஜ., உட்பட எந்த கட்சிகளையும், கூட்டணியில் சேர்க்காமல், அ.தி.மு.க., தனித்து களம் இறங்கியது. போட்டியிட்டதில், 37 இடங்களில் வெற்றியும் பெற்றது.


ஆனால், சட்டசபை தேர்தலில், தனித்து போட்டி என அறிவிக்க, அ.தி.மு.க., தயங்கி வருகிறது. தி.மு.க., தலைமையில், வலுவான கூட்டணி அமைந்து, தனித்து போட்டியிட்டால், சறுக்கலை சந்திக்க நேரிடும் என்பதால், தனித்து போட்டி என அறிவிக்காமல் உள்ளது. அதேநேரம், தி.மு.க., தலைமையில், பலமான கூட்டணி அமையாவிட்டால், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.


இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணி யில், பா.ஜ., இணைய உள்ளதாக, தகவல் வெளியானது.

ஆனால் அ.தி.மு.க., தலைமை, பா.ஜ.வை கூட்டணியில் சேர்க்கவில்லை என்பது, கட்சி நடவடிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில், விழா சிறப்பு மலரை, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நுார்ஜஹான், கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த பெஞ்சமின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


அதேபோல், நேற்று முன்தினம் நடந்த நேர்காணலிலும், அந்த இருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம், தங்கள் கூட்டணியில் பா.ஜ., இல்லை என்பதை, அ.தி.மு.க., தெளிவுபடுத்தி உள்ளதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.இது அ.தி.மு.க., கூட்டணியில் இணைய, ஆர்வமாக உள்ள, முஸ்லிம் கட்சிகளுக்கு, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016