சிதம்பரம் நடராஜர் மீது ஆணை: சாபம்விட்ட நிர்மலா சீதாராமன்



"தி.மு.க., அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழலுக்குப் பேர் போனது. அப்படியொரு ஊழலை கற்பனையில் கூட பார்த்திருக்க முடியாது" என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

சிதம்பரத்தில் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

தேர்தல் நேரத்தில் நிறைய கூட்டங்கள் நடக்கும். நிறைய வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால், மக்கள் முன்னிலையில் வாக்குறுதி கொடுப்பதற்கு தைரியம் வர வேண்டும். அது எப்போது வரும் என்றால் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கும் போது வரும்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு மட்டுமல்ல, குஜராத் முதல்வராக கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய பெருமைக்குரியவர் மோடி. தமிழகத்துக்கு நிறைய திட்டங்களை மோடி கொண்டு வந்திருக்கிறார். அவர் செயல்படுத்திய திட்டங்களை சொல்ல விரும்புகிறேன்.

2020ல் இருந்து கரீப் கல்யாண் அன்ன யோஜனா மூலம் 80 கோடி மக்களுக்கு இலவசமாக அரிசி கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 5 வருடங்களும் இவை கொடுக்கப்படும். ஏழைகள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படக் கூடாது என இத்திட்டத்தை மோடி கொண்டு வந்தார்.

சாதி, மதம் என என்ன பேசினாலும் விவசாயிகளில் ஏழைகள், பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர்கள் இருப்பார்கள். அங்கு பாகுபாடு எதுவும் பார்க்காமல் இந்த வர்க்கத்துக்கு எல்லாவற்றையும் செய்தால் அவர்கள் முன்னேற்றம் பெறுவார்கள்.

விவசாயத்தில் நெல்லோ சோளமோ வேர்க்கடலையோ எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு குறைந்தபட்ச அளவுக்காவது விலையை கொடுக்க வேண்டும். சோளத்துக்கு ஒரு குவிண்டாலுக்கு 1310 ரூபாய் கொடுத்து வந்த நிலையில் அது 2090 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வேர்க்கடலை ஒரு குவிண்டாலுக்கு 4000 கொடுத்து வந்த நிலையில் 6377 ரூபாய் கொடுக்கப்படுகிறது. எள்ளுக்கு குவிண்டாலுக்கு 4600 ரூபாய் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அதை 8635 ரூபாயாக மாற்றியுள்ளோம்.

பிஎம் கிஷான் சம்மான் யோஜனா மூலம் ஒவ்வொரு விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கும் 6000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர நெல் குவிண்டாலுக்கு 1310 ஆக இருந்ததை 2803 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2023 வரையில் 1.71 ஆயிரம் கோடி ரூபாய் பணம் விவசாயிகளின் கணக்குக்கு நேரடியாக சென்றுள்ளது. இந்த உண்மைகளை மறைக்க முடியாது.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை மோடி திறந்துள்ளார். அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக 60 கி,.மீ ரோடுக்கு 1025 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில் நிலையத்தைதை புதுமைப்படுத்தும் திட்டம், அரியலூர், சிதம்பரம் ரயில் நிலையங்கள் புதுப்பிப்பு போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.

மீனவர்களையும் விவசாயி என அங்கீகரித்து கிஷான் கிரடிட் கார்டை கொடுத்து அவர்கள் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் வாங்க முடியும். சிதம்பரம் தொகுதி முந்திரிக்கு பெயர் போனது. இங்கு பெண்கள் அதிக பங்களிப்பு செய்கிறார்கள். முந்திரிக்கு சரியான விலை கிடைக்கிறதா எனப் பார்த்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் இந்தத் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க.,வும் வேறு கட்சிகளும் இப்பகுதியின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை.

வெளிநாட்டில் கூட பிரபலமாக இருந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கையில் கொடுத்துக் கொண்டு சீரழித்துவிட்டது. அதைப் பார்க்கும்போது மனம் வேதனைப்படுகிறது. தி.மு.க., அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழலுக்குப் பேர் போனது. அப்படியொரு ஊழலை கற்பனையில் கூட பார்த்திருக்க முடியாது.

அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் என ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்தார்கள். அதனால் நாடு நிலைகுலைந்து போனது. உலக அளவில் சீர்குலைந்த நாடுகளின் பட்டியலுக்கு கொண்டு சென்றனர். அதை 10 வருடங்களாக முயன்று மோடி சரிசெய்தார்.

கோவிட் போன்ற சூழலில் கூட நோயை சரியாக கையாண்டு நாட்டை முதல் 5 இடங்களுக்குள் கொண்டு வந்தார். இது சாதாரணமாக செய்யக் கூடிய வேலை அல்ல. அதற்கு மக்களின் நம்பிக்கை தேவை. மக்களுக்கு சிரமம் கொடுக்காமல் வரியை சுமத்தாமல் நாட்டை முன்னேற்றுவது மட்டும் தான் ஒரே கொள்கை.

கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் என்ற பெயரையே வரவிடாமல் செய்தார். உலக அளவில் 100 பெரிய கம்பெனிகள் இருந்தால் அதில் 50 கம்பெனிகள் நம் நாட்டில் உள்ளது. பெங்களூரு, மும்பை, டில்லிக்கு என அந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஏன் தமிழகத்துக்கு இவை வரவில்லை?

அதைப் பற்றி யோசிக்காமல் 'கோபேக் மோடி' என நேரத்தை விரயம் செய்கின்றனர். 2019ல் கொண்டு வரப்பட்ட டிபென்ஸ் காரிடார் வாயிலாக உருவாக்கப்பட்ட பொருள்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததில் 20,000 கோடி கிடைத்துள்ளது. இந்த திட்டத்தைக் கொண்டு வந்தபோது தி.மு.க.,வினர் கறுப்புக் கொடியை பறக்கவிட்டனர்.

அதையெல்லாம் மோடி கண்டுகொள்ளவில்லை. போதைப் பொருள்களை இறக்குமதி செய்வோம் என்பது தான் அவர்களின் நிலைப்பாடு. ஒரு குடும்பம் தங்களின் சுயநலனுக்காக இளைஞர்களை போதை வயப்படுத்தி வேலை செய்ய முடியாத அளவுக்கு ஒரு தலைமுறையையே மண்ணாக்கும் வேலைகளைச் செய்கிறது.

போதைக் கடத்தலில் அந்தக் குடும்பத்தினரே சம்பந்தப்பட்டுள்ளனர். அதில் ஆதாயம் சம்பாதித்தார்கள். மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் இவர்கள் அழிந்து போவார்கள். இதை சிதம்பரம் நடராஜர் மீது உண்மையாக சொல்கிறேன்.

லோக்சபா தேர்தலில் யார் யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதை உணர்ந்து ஓட்டு போடுங்கள். மோடியுடன் சேர்ந்து வேலை செய்வதற்கான நேர்மையும் நியாயமும் உள்ள மக்களை தேர்வு செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Apposthalan samlin - sulaymaniyah, ஈராக்
13-ஏப்-2024 11:51 Report Abuse
Apposthalan samlin இந்த அம்மா சொன்னதில் எதிலும் நான் பயன் பெற வில்லை நான் mattum இல்லை தமிழ் நாடு மக்கள் எல்லோரும் அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி மோடிக்கு வோட் போடுவேன் ?நதிகலாய் inaitheerkala ? வேலை வாய்ப்பு கொடத்தேர்களா ?தனி நபர் பொருளாதாரம் உயர்ந்து உள்ளதா ? நான் ஏன் மோடிக்கு வோட் போடணும் ?
vbs manian - hyderabad, இந்தியா
12-ஏப்-2024 20:18 Report Abuse
vbs manian சபாஷ் மேடம் இப்படித்தான் பேச வேண்டும்.
ArGu - Chennai, இந்தியா
12-ஏப்-2024 18:57 Report Abuse
ArGu இங்க இருக்கறவனுக்கெல்லாம் அந்த அறிவெல்லாம் கெடையாது பத்துரூவா குடுத்தா போதும்.