தமிழிசை மீது கட்சி மேலிடம் அதிருப்தி - தேர்தல் தோல்வியை தொடர்ந்து புகார்

Tamilnadu Assembly Election News:  தமிழிசை மீது கட்சி மேலிடம் அதிருப்தி - தேர்தல் தோல்வியை தொடர்ந்து புகார்

சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, தமிழக தலைமை மீது, பா.ஜ., மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.,வின் சில முக்கிய புள்ளிகள், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை ரகசியமாக சந்தித்து, தமிழிசை மீது தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

சட்டசபை தேர்தலில், பா.ஜ., 155 இடங்களிலும், கூட்டணி கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், 24 இடங்களிலும், தாமரை சின்னத்தில் போட்டியிட்டன. எனினும், ஒரு தொகுதியில் கூட, அக்கட்சிகளால் வெற்றி பெறமுடியவில்லை.பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலர் எச்.ராஜா போன்றோர் கூட, தாங்கள் போட்டியிட்ட இடங்களில், 'டிபாசிட்' இழந்தனர்.


தேர்தல் தோல்விக்கு பண பட்டுவாடா, திராவிட கட்சிகளின் ஆதிக்கம் குறித்தெல்லாம் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மாநில தலைமையின் செயல்பாடு சரியில்லாததே முக்கிய காரணம் என, கட்சி மேலிடத்துக்கு சொல்லப்பட்டுள்ளதால், தமிழக தலைமை மீது, மேலிடம் கடும் கோபம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


இது குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகள்கூறியதாவது:தேர்தல் முடிவுகள் வெளியாதும், கட்சியின் இரு முக்கிய நிர்வாகிகள், டில்லி சென்று, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை, தனித்தனியே சந்தித்துள்ளனர். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் செயல்பாடுகளை விமர்சித்து, பல புகார்களை கூறியுள்ளனர்.தமிழக பா.ஜ., தலைவராக புதியவர் ஒருவரை நியமிக்கவும் கோரி உள்ளனர். இதனால், தமிழக பா.ஜ., கட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016